திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கி வந்த நிலையில், தற்போது 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தியேட்டர்
தியேட்டர்
Published on

தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வந்தது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனை கருத்தில் கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

அதன்படி ஏப்ரல் 10-ந் தேதி முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்நிலையில், பிப்ரவரி 16-ம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடித்து மற்றும் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com