

நடிகர் ரஜினிகாந்த் நடித்த தலைவர்-173ஆவது படத்தின் பெயர் வெளியீட்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது.
ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்திற்கு "தர்மன்" என பெயரிடப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இந்நிலையில் பட வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது,
நான் பேசினாலும் பிரச்சனை பேசவில்லை என்றாலும் பிரச்சனை.
நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிரச்சனை தான், அதேபோல் நம்மை பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் எல்லாமே பிடிக்கும் என நினைப்பதும் முட்டாள் தனம். பல வருடங்களுக்கு பிறகு இதை புரிந்துகொண்டேன்.
ராஜ்கமல் தயாரிப்பில் நான் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. படப்பிடிப்பில் அவ்வப்போது கமல் கருத்துக்களையும் புதிய யோசனைகளையும் தெரிவிப்பார். அது மீண்டும் தொடரவேண்டும். கமலோடு எனது நட்பு எப்போதும் நெருக்கமானது. எனக்கு தம்பி போன்றவர் கமல்.
"இளமை ஊஞ்சலாடுது" படத்தில் நான் நடிக்க கமல் தான் காரணம். "ஆடுபுலியாட்டத்தில்" பைக்கில் போகும் போது தாடியை ஷேவ் பண்ணிட்டு வண்டி ஓட்டினேன். அதற்கும் கமல் இது நல்ல இருக்கு புதிய கெட்டப் என்று புகழ்ந்தார்.
தர்மன் படத்தில் நல்ல ஒரு என்டேர்டெய்ன்மெண்ட் ஓட த்ரில்லரும் உண்டு. படம் நன்றாக இருக்கும். படத்திற்கு அனிரூத் இசை அமைக்க உள்ளார். மேலும் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க உள்ளது. படக்குழுவினருக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.