முதல் முறையாக மோகன் ராஜா இயக்கத்தில் கார்த்தி - வெளியான அசத்தல் அறிவிப்பு

இந்த புதிய பயணத்திலும் உங்களின் ஆசிகளை வேண்டுகிறேன்.
மோகன் ராஜா இயக்கத்தில் கார்த்தி
மோகன் ராஜா இயக்கத்தில் கார்த்தி
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கார்த்தி தனது அடுத்த படத்திற்கு இயக்குனர் மோகன் ராஜாவுடன் கைகோர்த்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனான மோகன் ராஜா, ஜெயம், சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்ரமணியம் ஆகிய படங்களை இயக்கியவர்.

குறிப்பாக 2015 இல் இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளியான தனி ஒருவன் படம், தமிழ் சினிமாவில் கிளாசிக் அந்தஸ்து பட்டியலில் இடம்பெற்ற படம். தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து வேலைக்காரன் படத்தை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் தனது மோகன் ராஜாவின் 11வது படத்தில் கார்த்தி முதன்முறையாக அவர் இயக்கத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை, தற்போது கார்த்தி நடித்து வரும் சர்தார் 2 படத்தை தயாரிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

திரைத்துறையில் தனது 25வது ஆண்டு

திரைத்துறையில் தனது 25வது ஆண்டைக் கொண்டாடும் இயக்குநர் மோகன் ராஜா, தனது எக்ஸ் தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மோகன் ராஜா தனது பதிவில் கூறியுள்ளதாவது, "என் பெற்றோரின் ஆசியோடும், குடும்பத்தினரின் அன்போடும், உங்கள் அனைவரின் ஆதரவாலும் எனக்கு எப்போதும் வெற்றி கிட்டியுள்ளது.

தற்போது எனது திரைப் பயணத்தின் 25வது ஆண்டில், எனது 11வது திரைப்படத்திற்காக என் அன்புச் சகோதரர் கார்த்தியுடன் இணைவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. எப்போதும் என் பக்கம் நிற்கும் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. இந்த புதிய பயணத்திலும் உங்களின் ஆசிகளை வேண்டுகிறேன்." என தெரிவித்துள்ளார்.

படம் தொடர்பான பிற விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இது ஒரு குடும்பக் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com