மீண்டும் வெளியாகும் ‘ஜில்லா’- எந்த தேதியில் தெரியுமா?

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.
மீண்டும் வெளியாகும் ‘ஜில்லா’- எந்த தேதியில் தெரியுமா?
Published on

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோரின் படங்கள் மீண்டும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

இந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘ஜில்லா’ படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 19-ந்தேதி சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய், காஜல் அகர்வால், சூரி, நிவேதா தாமஸ், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்த ‘ஜில்லா’ படம் மீண்டும் வெளியாக உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் பிறந்தநாள் 22-ந்தேதி கொண்டாப்பட உள்ளதையொட்டி முன்னதாக ‘ஜில்லா’ படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில், ‘ஜில்லா’ மீண்டும் வெளியாவது குறித்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com