'ஜன நாயகன்' டிக்கெட் விலை ரூ.2500

விலை உயர்ந்தாலும் முதல் காட்சிக்கான டிக்கெட் முன்பதிவு ஆயிரத்துக்கு மேல் இருந்தாலும் முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.
ஜனநாயகன்
ஜனநாயகன்
Published on

தமிழக முதலமைச்சராக விஜய் பதவி ஏற்று முதல் படமாக திரைக்கு வரும் படம் என்பதால் இந்திய அளவில் படத்தை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாட காத்திருக்கின்றனர்.

ஜன நாயகன்

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி, இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாக இருந்தப் படம் 'ஜன நாயகன்'. ஆனால் தணிக்கை பிரச்சனையால் வெளியாகவில்லை.

ஒருவழியாக பல்வேறு பிரச்சனைகளை தாண்டி மத்திய தணிக்கை வாரியம் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியது. இதனையடுத்து படம் வருகிற 23-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதனைத்தொடர்ந்து படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. பல தடைகளை தாண்டி படம் வெளிவருவதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.

மேலும் தமிழக முதலமைச்சராக விஜய் பதவி ஏற்று முதல் படமாக திரைக்கு வரும் படம் என்பதால் இந்திய அளவில் படத்தை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாட காத்திருக்கின்றனர்.

விலை உயர்வு

இந்நிலையில் தமிழகத்தில் படத்தின் டிக்கெட் விலை பொதுவாக ரூ.100 முதல் ரூ.800 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி, கேரளா பகுதிகளில் டிக்கெட் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. விலை உயர்ந்தாலும் முதல் காட்சிக்கான டிக்கெட் முன்பதிவு ஆயிரத்துக்கு மேல் இருந்தாலும் முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.

பெங்களூரு சினி போலீஸ் நெக்ஸஸ் சாந்தி நிகேதனில் சாய்வு இருக்கையில் டிக்கெட் விலை ரூ.2500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் இதுதான் அதிகபட்ச விலை ஆகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com