மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம் - மீண்டும் இயக்குநராகும் அர்ஜூன்

இப்படத்திற்கு 'சீதா பயணம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழில் அறிமுகமாகிறார்.
மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம் - மீண்டும் இயக்குநராகும் அர்ஜூன்
Published on

ஸ்ரீராம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான அர்ஜுன் சர்ஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இயக்குநராகக் களமிறங்குகிறார். மனதை இலகுவாக்கும் ஒரு மென்மையான படைப்பாக உருவாகும் இப்படத்திற்கு 'சீதா பயணம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

சீதை எனும் பாத்திரத்தில் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் கருணை ஆகியவற்றின் உருவமாக நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். இவர் தெலுங்கில் அறிமுகமாகும் முதல்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.  இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழில் அறிமுகமாகிறார்.

சீதா பயணம் படத்தில் மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக  வெளியாக இருக்கிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com