உங்களுடன் பயணித்தது அற்புதமான அனுபவம்... நன்றி விஜய் சார்- அனிருத் நெகிழ்ச்சி

4 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ.200 கோடி வசூலை கடந்துள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜன நாயகன் பட காட்சி
ஜன நாயகன் பட காட்சி
Published on

'ஜனநாயகன்', 'லியோ', 'பீஸ்ட்', 'மாஸ்டர்' மற்றும் 'கத்தி' ஆகிய படங்கள் மூலமாக உங்களுடன் பயணித்தது மிகவும் அற்புதமான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு அனுபவம் என்று கூறியுள்ளார்.

ஜன நாயகன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து இன்று தமிழக முதலமைச்சராக மாறியுள்ளார், விஜய். எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' பல்வேறு சிக்கல்களை கடந்து கடந்த 23-ந்தேதி வெளியானது.

இந்த படம் ஏற்கனவே சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகி இருந்தாலும், விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் திரையிடப்பட்ட தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் மிகுதியாக இருந்தது.

வசூல்

முதல் நாள் வசூலே ரூ.80 கோடியை தாண்டியது. இந்தநிலையில், 4 நாட்களில் 'ஜனநாயகன்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ.200 கோடி வசூலை கடந்துள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனிருத்

இதனிடையே, இசையமைப்பாளர் அனிருத் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

'ஜனநாயகன்', 'லியோ', 'பீஸ்ட்', 'மாஸ்டர்' மற்றும் 'கத்தி' ஆகிய படங்கள் மூலமாக உங்களுடன் பயணித்தது மிகவும் அற்புதமான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு அனுபவம்.

என்றென்றும் நான் போற்றிப் பாதுகாக்கும் நினைவுகளுக்கும், என் மீதான அளப்பரிய நம்பிக்கைக்கும் நன்றி விஜய் சார், இசை என்றும் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com