பாரதிராஜா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

பாரதிராஜாவின் உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பாரதிராஜா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ஓரளவு உடல் நலம் தேறி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அதன் பிறகும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்திலேயே இயக்குனர் பாரதிராஜாவின் உயிர் பிரிந்தது.

இயக்குனர் பாரதிராஜா மரணம் அடைந்ததால் தமிழ் திரையுலகமே இன்று சோகத்தில் மூழ்கியுள்ளது. பாரதிராஜாவின் உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள், பொதுமக்கள் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், மறைந்த பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து பாரதிராஜாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

‘16 வயதினிலே’ படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்திற்கு தனி அடையாளம் கொடுத்தவர் பாரதிராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com