ரஜினிக்கு முன்பே கமல் அரசியலுக்கு வந்து விடுவார்: நடிகை கஸ்தூரி பேட்டி

ரஜினிக்கு முன்பே கமல் அரசியலுக்கு வந்து விடுவார் என்று நடிகை கஸ்தூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரஜினிக்கு முன்பே கமல் அரசியலுக்கு வந்து விடுவார்: நடிகை கஸ்தூரி பேட்டி
Published on

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மற்ற மாநிலங்களில் இல்லாத ஒன்றாக தமிழகத்தில் சினிமா கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் இரண்டாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்போதே தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் உள்ளனர்.

எனவே கட்டண உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ரஜினியும், கமலஹாசனும் பேசுவதே இப்போது தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை கேள்வி கேட்க யாருமில்லாத நிலை இருந்தது.

இப்போது அவர்கள் கேள்வி கேட்கும் போது, அதை எதிர்த்து மற்றவர்கள் எதிர்கேள்வி கேட்கின்ற நிலையை உருவாகி உள்ளது.

ரஜினி, கமல் 2 பேருமே சமூக அக்கறை கொண்டவர்கள். சமூக மாற்றத்தை கொண்டு வர கூடிய வேண்டும் என்று நினைப்பவர்கள். இருவரும் அரசியலுக்கு வருவது நல்லது தான்.

ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்பே நடிகர் கமல் வந்துவிடுவார் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com