சர்கார் படத்துக்கு தடை கோரி வழக்கு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுள்ளது. #Sarkar #Vijay
சர்கார் படத்துக்கு தடை கோரி வழக்கு
Published on

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளி பண்டிகையான வருகிற நவம்பர் 6-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கின்றனர். 

தமிழ்நாடு முழுவதும் அதிகமான தியேட்டர்களை ‘சர்கார்’ படத்துக்கு ஒதுக்கி உள்ளனர். ரசிகர்களும் தீபாவளியை சர்கார் படத்தோடு கொண்டாட பேனர்கள், சுவரொட்டிகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

இந்நிலையில், ‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

ராஜேந்திரன் என்பவர் கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியுள்ளதாக வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இதை அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டிருக்கிறார். இதையடுத்து இந்த வழக்கு நாளை விசாரணை

க்கு எடுத்து கொள்ளப்படுகிறது. #Sarkar #Vijay

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com