விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்

விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ஆஸ்திரேலிய போலீஸ், ரஜினி படத்தை பயன்படுத்தி அவர்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். #Rajini #Rajinikanth
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
Published on

மேற்கு ஆஸ்திரேலியாவின் டெர்பி நகரின் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ரஜினியின் படத்தை பயன்படுத்தி ஒரு வினோத வழக்கை பதிவு செய்துள்ளது.

டெர்பி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்த ஒருவரை சோதனை செய்துள்ளனர். அவரது மூச்சுக்காற்றில் 0.341 அளவிற்கு ஆல்கஹால் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த அளவு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சையில் இருக்கும் நபர் அல்லது கோமா நிலையில் இருக்கும் நபர் வாகனத்தை ஓட்டி வருவதற்கு சமம் என்று போலீசார் கூறியுள்ளனர். அதனை ஆச்சரியமாக குறிப்பிடும் வகையில் ரஜினியின் 2.0 படத்தில் வரும் வசனம் உள்ள காட்சியை இதற்கு படமாக பதிவிட்டுள்ளனர். இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் தற்போது அந்த பதிவை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

விழிப்புணர்வு தொடர்பான தகவல்களை மக்களுக்கிடையே ஏற்படுத்துவதற்கு சமூக வலைதளங்களின் மீம்ஸ்தான் இன்றைய முக்கிய பிரசாரமாக விளங்குகிறது. அந்த வகையில் போலீசார் தொடங்கி பலரும் மக்களுக்கு நல்ல கருத்துகளை கொண்டு செல்லவும், விதி முறை மீறல்களால் ஏற்படும் பாதிப்புகளை தெரியப்படுத்தவும் திரைப்பட மீம்ஸை பயன்படுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com