நவம்பரில் ரிலீசாகும் அதர்வாவின் `செம போத ஆகாதே'

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா - மிஷ்டி, அனைகா சோதி நடிப்பில் உருவாகி வரும் செம போத ஆகாதே படம் வருகிற நவம்பரில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பரில் ரிலீசாகும் அதர்வாவின் `செம போத ஆகாதே'
Published on

`செம போத ஆகாதே' படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடிக்கின்றனர். இவர்களுடன் அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தில் இருந்து ஏற்கனவே டீசர் மற்றும் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்திற்கான ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதன்படி படத்தை வருகிற நவம்பர் மாதம் வெளியிட இருப்பதாக புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தை தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் வெளியிடுகிறது.

அதற்கு முன்னதாக தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் விஜய்யின் `மெர்சல்' படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com