

இயக்குனர் மிஷ்கின் துப்பறிவாளன் படத்திற்கு பிறகு சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், சுட்டுப்பிடிக்க உத்தரவு ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது, தான் இயக்கும் அடுத்த படத்திற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகி யார் என்பது முடிவாகாமல் இருந்த நிலையில், தற்போது அதிதி ராவ் ஒப்பந்தமாகியுள்ளார். படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். செப்டம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளனர்.
மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை மூலம் அறிமுகமானவர் அதிதி ராவ். தொடர்ந்து அவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் செக்கச்சிவந்த வானம் படத்திலும் நடித்துள்ளார்.
மிஷ்கின் படங்களில் கதை, கதாநாயகர்கள் அளவுக்கு ஒளிப்பதிவும் பெரியளவில் பேசப்படும். வெவ்வேறு ஒளிப்பதிவாளர்கள் பணிபுரிந்தாலும் மிஷ்கின் படத்தின் காட்சிகள் தனித்து தெரியும் விதத்தில் அதன் ஒளிப்பதிவு அமைந்திருக்கும்.
அதே சமயம் பி.சி.ஸ்ரீராம் எந்த இயக்குனர்களின் படங்களில் பணியாற்றினாலும், அவரது காட்சியும் தனித்துத் தெரியும். இருவரும் ஒரே படத்தில் இணைந்திருப்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #UdhayanidhiStalin #AditiRaoHydari