கமலுக்கு கருத்து சொல்ல உரிமை உண்டு: நடிகை கவுதமி கருத்து

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கமலுக்கு கருத்து சொல்ல உரிமை உண்டு என்று நடிகை கவுதமி கருத்து தெரிவித்துள்ளார்.
கமலுக்கு கருத்து சொல்ல உரிமை உண்டு: நடிகை கவுதமி கருத்து
Published on

குற்றச்சாட்டு பற்றி பேசுவதை விட உலகத்தில் எல்லாமே இருக்கும். கெட்ட வி‌ஷயங்கள் இருப்பது மாதிரி நல்ல வி‌ஷயங்களும் இருக்கும். தப்பு செய்பவர்கள் இருக்கிற மாதிரி நல்லது செய்பவர்களும் இருக்கிறார் கள். எல்லாமே இருக்கும். உலகத்தில் எல்லா வி‌ஷயத்தி லும் இருக்கிற மாதிரி கண்டிப்பாக அரசியலிலும் இருக்கும்.

ஆனால் அதே நேரத்தில் நல்லது செய்பவர்கள், பாசிட்டிவாக செயல்படுபவர்கள் இருக்கிறார்கள்.

அனைத்து துறைகளிலும் ஊழல் என்று கமல் கூறுவது அவருடைய கருத்து. அவருடைய கருத்தை வெளிப்படுத்துவதற்கு அவருக்கு மட்டுமல்ல எல்லோருக்கும், இந்திய நாட்டில் உள்ள எல்லோருக்கும், நாட்டின் குடிமகனாக இருக்கும் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது.

நான் என்ன சொல்கிறேன் என்றால் நல்லது கெட்டது எல்லாமே இருக்கிறது. தப்பான வி‌ஷயத்தை எப்படி நாம் சொல்கிறோமோ, அதே மாதிரி நல்ல வி‌ஷயத்தையும் எடுத்துச்சொல்ல வேண்டும். ஏனென்றால் இதில் மக்களுக்கு ஆதரவு சொல்ல வேண்டிய அவசியமும் இருக்கிறது. எனவே நாம் நல்லது கெட்டது இரண்டையுமே பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com