2.0 எந்திரனின் தொடர்ச்சியா?: சங்கர் விளக்கம்

சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் 2.O படம், ‘எந்திரன்’ படத்தின் தொடர்ச்சியா என்பதற்கு இயக்குனர் சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
2.0 எந்திரனின் தொடர்ச்சியா?: சங்கர் விளக்கம்
Published on
சங்கர் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘2.O’. இதில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு நாளை துபாயில் நடைபெற உள்ளது.

இதற்காக ‘2.0’ படக்குழுவினர் துபாய் சென்றுள்ளனர். அங்கு ‘2.0’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குனர் சங்கர் பேசும்போது, ‘2.0’ தமிழ் திரைப்படம் இல்லை;, உலக அளவில் கவனம் பெறும் விதமாக இந்தியாவில் உருவாகியிருக்கும் ஹாலிவுட் தரத்திலான படம். இப்படம் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் இல்லை.

‘2.0’வின் கதை ‘எந்திரன்’ கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதில் வில்லனாக நடித்திருக்கும் அக்‌ஷய் குமார் சிறந்த நடிப்பாற்றலை கொண்டவர். அவருக்கு இப்படத்தில் பல்வேறு தோற்றங்கள் இருக்கின்றன’’ என்று கூறியுள்ளார்.
X

Maalai Malar
www.maalaimalar.com