2.0 இசை வெளியீட்டு விழா: ரஜினி இன்று இரவு துபாய் பயணம்

சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.O’ படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நடைபெற இருக்கிறது. இதற்காக ரஜினி இன்று இரவு துபாய் செல்ல இருக்கிறார்.
2.0 இசை வெளியீட்டு விழா: ரஜினி இன்று இரவு துபாய் பயணம்
Published on

நாளை (வியாழக்கிழமை) மாலை ரஜினிகாந்த், இயக்குனர் ‌ஷங்கர், அக்‌ஷய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பிரமுகர்கள் அவர்கள் தங்கியுள்ள ஓட்டலில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக 7 நட்சத்திர ஓட்டலான பியூரிஜ்- அல்- அரப் செல்கின்றனர்.

அங்கு 2.0 படத்திற்கான உலகளாவிய பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறு"கிறது. 2.0 படத்தின் இசை வெளியீடு பியுரிஜ் பார்க்கில் வருகிற 27-ந்தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. முதன் முறையாக இதற்கு துபாய் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

12 ஆயிரம் பேர் இந்நிகழ்ச்சியைப் பார்க்க இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூபாய் 2 கோடி செலவில் பிரம்மாண்ட எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் நிகழ்ச்சியை கண்டு ரசிக்க முடியும். துபாய் மன்னர் இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com