பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் - முதல் மந்திரி பசவராஜ் பொம்மை

கர்நாடக சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது. பா.ஜ.க. பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என முதல் மந்திரி தெரிவித்தார்.
பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் - முதல் மந்திரி பசவராஜ் பொம்மை
Published on

பெங்களூரு:

முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:

கர்நாடக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். எங்கள் கட்சிக்கு அனைவரின் ஆசிர்வாதமும் உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைவது உறுதி. சித்தராமையா, டி.கே.சிவகுமாரின் தொலைக்காட்சி பேட்டியை பார்த்தேன். காங்கிரசில் எதுவும் சரியாக இல்லை என்பது தெரிகிறது.

மக்களுக்கு ஒற்றுமையாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் முயற்சி செய்துள்ளனர். இது போன்ற நாடகம் பா.ஜ.க.வில் நடக்காது. ஏனெனில் எங்கள் கட்சியில் ஒற்றுமை உள்ளது. எங்களுக்கு மக்களின் ஆதரவும் உள்ளது.

மக்களின் பிரச்சினைகளை அறிந்து செயல்படுவது என்பது மிக முக்கியமானது. எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்கிறேன். சிக்காவி தொகுதியில் எனது குடும்பத்தினருடன் வாக்களிக்க உள்ளேன் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com