பஜாஜ் CNG பைக் வெளியீட்டில் திடீர் மாற்றம் - வெளியான புது அப்டேட்

பைக்கின் டிசைனில் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த பைக் பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் சி.என்.ஜி. மோட்டார்சைக்கிள் இந்த மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், பஜாஜ் சி.என்.ஜி. பைக் ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரம் (ஜூலை 17) வெளியாகும் என்று பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

புதிய பைக் குறித்து பேசிய ராகேஷ் ஷர்மா "பட்ஜெட் பிரிவில் கவனம் செலுத்துவோரை குறிவைத்து பஜாஜ் சி.என்.ஜி. பைக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக பைக்கின் டிசைனில் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த பைக் என்ட்ரி லெவல் பிரிவிலேயே நிலைநிறுத்தப்படும்," என்று அவர் தெரிவித்தார்.

பஜாஜ் சி.என்.ஜி. பைக் ஒரே மாடலாக இல்லாமல், பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த பைக்கின் திறன் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த பைக் 100 முதல் 150 சிசி வரையிலான திறன் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com