கன்னி- வார ராசிபலன் 9.8.2026 முதல் 15.8.2026 வரை

பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
Kanni
Published on: 

கன்னி

திட்டங்கள் லட்சியங்கள் நிறைவேறும் வாரம். ராசிக்கு 11-ம் மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன் புதன் குரு பார்வை உள்ளது. பல நாள் கனவுகள் லட்சியங்களை நிறைவேற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் கூடி வரும். வாழ்க்கை நகர்த்துவதில் நிலவிய அனைத்து விதமான தடை, தாமதங்கள் விலகும். அனைத்து மாற்றங்களும் உங்களின் எதிர்காலத்திற்கு நல்லதாகவே அமையும். அதிக நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சு எடுபடும் கௌரவம் அந்தஸ்து உயரும். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வேலைக்கு செல்லும் இடத்தில் மதிப்புடன் நடத்த படுவீர்கள். சிலருக்கு சிறு பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் நிலவும். சுப நிகழ்வுகள் நடைபெறும். மூத்த சகோதர, சகோதரிகள் சித்தப்பா மூலம் நல்ல ஆதாயம் உண்டு. நீண்ட நாட்களாக ஏதாவது நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்தால் இப்பொழுது ஆரோக்கியம் மேம்படும்.ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் வயது முதிர்ந்த சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் போன்ற மங்களப் பொருட்களை வழங்கி ஆசி பெறுவது நல்லது.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com