கன்னி- 2026 ஆனி மாத ராசிபலன்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.
Kanni
Published on

கன்னி

கன்னி ராசி நேயர்களே!

பராபவ வருட ஆனி மாதக் கிரசு நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் தொழில் ஸ்நானத்தில் சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே 'புத ஆதித்ய யோகம்' உருவாகிறது. இதனால் பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்காலத்தை பற்றிய பயம் விலகும். லாப் குருவின் ஆதிக்கத்தால் லாபம் வந்து கொண் டேயிருக்கும். புதிய பங்குதாரர்கள் இணைந்து, பொருள் வளம் பெருக வழிவகுத்துக்கொடுப்பர். ஆரோக்கியத் தொல்லை அகலும், உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். அஷ்டமத்து செவ்வாய் மாறிய பிறகு மன நிம்மதி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

ரிஷப -செவ்வாய்

ஆனி மாதம் 5-ந் தேதி (19.6,2006) அன்று செவ்வாய், ரிஷப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3. 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய் அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு செல்லும்போது இடம். பூமியால் லாபம் கிடைக்கும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். 'கடன் சுமையின் காரணமாக வங்கிய இடத்தை விற்று விட்டோமே என்று கவலைப்பட்டவர்களுக்கு. புதிய இடம் வாங்கும் யோகம் உண்டு பல நாட்களாக நடைபெற்ற பஞ்சாயத்து நல்ல முடிவிற்கு வரும் செவ்வாய் ரிஷபத்தில் சஞ்சரிக்கும்போது இதுவரை நடைபெறாத காரியங்கள் படிப்படியாக நடைபெறும் துணிவும், நன்னம்பிக்கையும் கூடும். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொண்டால், உங்களின் எண்வங்கள் அனைத்தும் நிறைவேறும்.

சிம்ம-சுக்ரன்

கடக ராசியில் சஞ்சரிக்கும் சுக்ரன் ஆனி 21-ந் தேதி (5.7.2026) அன்று சிம்ம ராசிக்கு செய்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்திற்கு வருவதால் வி யங்கள் கூடும். குடும்ப முன்னேற்றம் கருதி அத்தியாவசியப் பொருட்களையும், ஆடம்பர பொருட்களையும் வாங்குவதில் மகிழ்ச்சி காண்பீர்கள். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை வாகன யோகம் உண்டு. பயனாங்கள் பலன் தருவதாக அமையும்.

சனி வக்ரம்

ஆனி 31-த் தேதி (15.7.2026) அன்று மீன் ராசியில் மனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி. வக்ரம் பெறுவது ஒரு வகையில் நன்மைதான். 6ம் இடத்திற்கு அதிபதியானவர் வக்ரம் பெறுவதால் எதிரிகளின் தொல்லை குறையும். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். உந்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வர். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். மாற்று மருத்துவந்தால் உடல்நலம் சீராகும். உங்கள் ராசிக்கு 1, 4, 9 ஆகிய இடங்களில் சனியின் பார்வை பதிகிறது. அதேபோல் குருவின் பார்வை எனி மீது பதிவதால். சனி பகலாவின் கடுமை குறைத்து, நன்மைகள் அதிகரிக்கும். குறிப்பாக குடும்ப ஒற்றுமை பலப்படும். உடன்பிறந்தவர்களின் திருமண காரியம் கைகூடும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு வெளிநாடு சென்று படிக்க விரும்பிய பிள்ளைகளுக்காக எடுத்த முயற்சி நிறைவேறும். உத்தியோகத்தில் வரும் இடமாற்றம் இனிமை தரும் விதத்தில் அமையும். அரசியல் கனத்தில் இருப்பவர்களுக்கு திடீரென நல்ல பொறுப்புகள் வந்துசேரும் பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நிலையான வருமானமும், நிதிநிலையில் ஆதரவும் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. மாணவ மாணவிகளுக்கு போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும் பெண்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அடிக்கடி பயணங்களும், அதனால் விரயங்களும் ஏற்படும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜூன்: 18, 19, 25, 26, 29, 30, ஜூலை: 11, 12, 15, 16.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com