

வருமானம் அதிகரிக்கும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். வீடு, நிலம், தோட்டம், வாகன யோகம் உண்டாகும். சிலர் வீட்டை புதுப்பிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். இனிமேல் வராது என்று முடிவு செய்த வராக்கடன் வசூலாகும். குடும்ப பொருளாதார பிரச்சினையை சமாளிக்க நீங்கள் வாங்கிய கடனை சிறுது சிறிதாக அடைக்க முயல்வீர்கள். குடும்ப உறவுகளின் நன்மதிப்பை பெற சற்று அதிகமாகவே செலவு செய்வீர்கள். சிலர் தொழிலில் உபரியாக சம்பாதித்து லாட்டரி அல்லது பங்குச் சந்தையில் கொடுத்து ஏமாறுவார்கள். சில அண்ணன் தம்பிகள் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். ஆழ்மன தியானத்தின் மூலம் ப்ரபஞ்ச சக்தியை உணர்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான நேரம். அயராது உழைத்து வெற்றியும் காண்பீர்கள். ஆடி அமாவாசை அன்று குடும்ப உறுப்பினர்கள் ஒன்றினைந்து பித்ருக்கடன் தீர்த்து முன்னோர்களின் நல்லாசி பெறுவீர்கள்.