ரிஷபம்- வார ராசிபலன் 24.5.2026 முதல் 30.5.2026 வரை

பூர்வீக சொத்து தொடர்பான வம்பு, வழக்கு, பேச்சு வார்த்தை இழுபறியாகும்.
ரிஷபம் வார ராசிபலன்
Published on

ரிஷபம்

மனக்கவலைகள் அகலும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்களின் ஆற்றல்,நேர்மறை எண்ணம் அதிகரிக்கும்.குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், மனச் சங்கடங்கள் மறையும்.

வியாபாரம்

புதிய சொகுசு வாகனம் மற்றும் சொத்து வாங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து தொடர்பான வம்பு, வழக்கு, பேச்சு வார்த்தை இழுபறியாகும். தொழிலில் வியாபாரம் பெருகும். வருமானம் அதிகரிக்கும். அரசு, தனியார் பணியில் உள்ளவர்களுக்கு உபரி வருமானம் மகிழ்ச்சியைத் தரும். மருமகன், மருமகள் பேரன், பேத்தி போன்ற புதிய உறவுகள் உருவாகும் காலம்.சுய வைத்தியத்தை தவிர்க்க வேண்டும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படலாம்.

அதிர்ஷ்டம்

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட பண வரவு உண்டாகலாம்.கண் திருஷ்டி, செய்வினை, ஆரோக்கிய கேடு, வேலையின்மை போன்ற பாதிப்புகள் விலகும்.வைகாசி விசாகத்தன்று ரோஜா மாலை அணிவித்து முருகனை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com