

சுப விரயங்கள் அதிகமாகும் வாரம். வார இறுதியில் ராசி அதிபதி சுக்கிரன் நீச்சம் அடைகிறார். இதற்கு சனி பகவானின் சமசப்தம பார்வை உள்ளது. செலவிற்கேற்ற வரவும் வரும். விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை கவனமாக கையாளவும். சிலர் தொழிலுக்காக பூர்வீகத்தை விட்டு இடம் பெயரலாம். வெளிநாடு, வெளிமாநில பயணம் சிறப்பாகும், வாரிசுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு தீர்வு கிடைக்கும். சாதரணமானவர்களும் சாமானியர்களாக மாறப்போகும் வாரம். பாஸ்போர்ட், விசா, குடியுரிமை தொடர்பான சர்ச்சைகள் அகலும். தந்தையால் ஏற்பட்ட உபத்திரவம் குறையும். முன்னோர் சொத்திற்காக நீதி மன்றப்படி ஏறியவர்களுக்கு தீர்ப்பு சாதகமாகும் அல்லது வழக்குகள் தள்ளிப்போகும். 28.7.2026 அன்று இரவு 7.49 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களுக்கு கடனுக்கு பொருள் கொடுக்கக் கூடாது. அனைவரிடமும் கனிவுடன் நடந்து கொள்ளவது அவசியம். ஆடி வெள்ளிக்கி ழமை அம்மனுக்கு துள்ளுமாவு படைத்து வழிபடவும்.