விருச்சிகம்- வார ராசிபலன் 7.6.2026 முதல் 13.6.2026 வரை

புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும்.
விருச்சிகம் வார ராசிபலன்
விருச்சிகம்- வார ராசிபலன்
Published on

விருச்சிகம்

விபரீத ராஜயோகமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி, 2,5 ம் அதிபதி குரு உச்சம் என விருச்சிக ராசிக்கு கிரக நிலவரம் மிக சாதகமாக உள்ளது. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். சிந்தனைகளும் எண்ணங்களும் உயர்வானதாக இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.

அவ்வப்போது பணப் பற்றாக்குறை வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். திருமணம், குழந்தைப் பேறு கைகூடும். வெளிநாட்டு தொழில், உத்தியோக வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும்.

கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப் போராட்டங்கள் தீரும்.எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாகுவார்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பூர்வீக சொத்து தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் நிலவிய சங்கடங்கள் அகன்று முன்னேற்றம் தோன்றும். தம்பதிக்குள் ஒற்றுமை நிலவும். பெண்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திருமணம், சந்ததி விருத்தி ஏற்படும். பிரதோஷ நாள் அன்று பன்னீர் அபிஷேகம் செய்து சிவனை வழிபட வேண்டும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி,

செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com