தனுசு- வார ராசிபலன் 9.8.2026 முதல் 15.8.2026 வரை

நேர்மை, நாணயத்தை கட்டி காப்பாற்றும் எண்ணம் தோன்றும்.
Thanusu
Published on: 

தனுசு

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும் வாரம். ராசிக்கு சனி செவ்வாயின் பார்வை உள்ளது. சனிபகவான் வக்கிரகதியில் செல்வதால் தெளிவான மனநிலை யோடு செயலாற்றுவீர்கள். நடக்குமா என்ற காரியத்தை தன்னம்பிக்கை யோடு நடத்தி காட்டுவீர்கள். குடும்பத்தில் நல்ல சூழ்நிலை நிலவும். பலவிதமான வாழ்வியல் மாற்றங்களும் ஏற்றங்களும் உண்டாகும். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் போட்டிகளில், பந்தயங்க ளில் கலந்து கொண்டு பரிசுகளும் பாராட்டுகளும் பெறுவீர்கள். நேர்மை, நாணயத்தை கட்டி காப்பாற்றும் எண்ணம் தோன்றும். எதார்த்தமாக வாழ்வீர்கள் எதற்காகவும் யாருக்காகவும் அலட்ட மாட்டீர்கள். 11.8.2026 அன்று அதிகாலை 4.43 முதல் 13.8.2026 அன்று காலை 6.6 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சுறுசுறுப்பும் செயல் திறனும் குறையும். குடும்பத்தினரின் சில செய்கைகள் முட்டுக்கட்டையை ஏற்படுத்தும். ஆடி வெள்ளிக்கி ழமை மஞ்சள் லட்டு தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com