தனுசு- 2026 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்

புதிய தொழில் முயற்சியில் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம்.
Thanusu
Published on

குரு கடாட்சம் பெற்ற தனுசு ராசியினரே...

தனுசு ராசிக்கு 2,3ம் அதிபதியான சனி பகவான் கோட்ச்சாரத்தில் 27.7.2027

முதல் 10.12.2026 வரை வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார்.குடும்பத்தில் நிம்மதி,மகிழ்ச்சி பெருகும். வெளியில் சொல்ல முடியாது தவித்த பல பிரச் சினைகள் தானாக தீரும். குடும்ப உறுப்பினர்கள் ஒரு வரையொருவர் புரிந்து கொள்ளும் தன்மை அதி கரிக்கும். பொருளாதார முன்னேற்றம் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.கடன் தொல்லையிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும். பேச்சை மூலதனமாக கொண்ட வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், புரோகிதர் கள், ஜோதிடர்கள், மார்கெட்டிங், உணவுத் தொழில், ஹோட்டல் போன்ற துறையினர் நல்ல ஏற்றம் பெறுவார்கள். மிக மோசமான பிரச்சனைகளை சந்தித்தவர்கள் கூட தலை நிமிர்ந்து நிற்க கூடி நல்ல நேரம் ஆரம்பமாகிவிட்டது. பள்ளி, கல்லூரி படிப்பை இடையில் நிறுத்திய மாணவ,மாணவிகள் மீண்டும் படிப்பை தொடர்வார்கள். தாயுடன் தேவையற்ற கருத்து வேறுபாடு வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். சொத்து வாங்குவது, விற்பது போன்றவற்றை ஒத்தி வைக்கவும். புதிய தொழில் முயற்சியில் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம்.

மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும் குடிபுகும். கண், பல் தொடர்பான பிரச்சனைக்கு வைத்தியம் செய்ய நேரும்.சகோதர்களால் வீண் விரயம் உண்டு. கடன் பெற்று சொந்த வீடு வாங்குவீர்கள். வாழ்க்கைக் துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும். மறுமண முயற்சி சித்திக்கும். தகப்பனாருடன் ஏற்பட்ட வருத்தம் மறையும்.உங்கள் இலக்கை அடைய குருபகவான் அருள் புரிவார்.சகல காரியங்களும் சித்தி பெறும். உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக நீங்கள் காணும் கனவுகள் பலிதமாகும். முன்னோர்கள் வழிபாடு மிக அவசியம்.உங்கள் இஷ்ட,குல தெய்வத்தின் மேல் நம்பிக்கை வைத்து இந்த வக்ர பெயர்ச்சியை கடப்பது சிறப்பு.

சனிபகவான் ரேவதி நட்சத்திர சாரத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலம்

(27.7.2026 முதல் 9.10.2026 வரை) தனுசு ராசிக்கு 7, 10ம் அதிபதியான புதனின் ரேவதி நட்சத்திர சாரத்தில் சனிபகவான் வக்ரமடையும் காலத்தில்சாதகமான தசை,புக்தி நடைபெறுபவர்கள் இந்த கிரக மாற்றத்தை சாதகமாக பயன்படுத்தி வாழ்க்கையில் செட்டில் ஆவார்கள்.தொழில் தேக்கத்தால் இருந்த மனச்சோர்வு நீங்கி ஊக்கம் பெறுவீர்கள்.தொழில்,உற்பத்தி, வியாபாரம் வருவாய் மூன்றும் சமமாக வெற்றி பெற்று மனதிற்கு மகிழ்ச்சி தரும். சிலர் புதிய தொழில் தொடங்கவும் தொழில் சார்ந்த உபதொழிலைச் செய்யவும் திட்டமிடுவீர்கள்.பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், கலைத்துறையினர் இலக்கியப் பேச்சாளர்கள், ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் ஆகியவர்களுக்கு தொழில் ரிதீயான மிகப்பெரிய விளம்பரம் மற்றும் வளர்ச்சி கிடைக்கும்.கூட்டாளிகளின் ஆதரவு உண்டு. விவாகரத்திற்காக சட்ட உதவிய நாடிய கணவன் மனைவிகள் நீதி மன்ற அறிவுரையை ஏற்று சேர்ந்து வாழ்வார்கள்.ஏதேனும் வழக்குகளால் சிறை தண்டனை அனுபவித்தவர்களுக்கு நன் நடத்தை காரணமாக தண்டனை காலம் குறையும். வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் இருப்பவர்கள் தாய்நாடு திரும்புவார்கள்.கணவன் மனைவியர் தங்களின் பிரச்சனையை தாங்களே அடுத்தவர்களின் தலையீடு இல்லாமல் சரி செய்து கொள்வது உயர்வைத் தரும்.

சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலம்

(10.10.2026 முதல் 10.12.2026 வரை) தனுசு ராசிக்கு 2,3ம் அதிபதியான சனி பகவான் தனது சொந்த நட்சத்திரத்தில் வக்ர சஞ்சரிக்கும் காலத்தில் திருமணம் தடை பட்டவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.குழந்தை பாக்கியம் விரும்பியவர்களுக்கு பிள்ளைப் பேறு கிடைக்கும்.தடைபட்ட வாடகை வருமானம் வரும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். தாய் வழி உறவினர்களின் அன்பு, ஆதரவு, முழு ஒத்துழைப்பு கிடைக்கும்.தாய் வழி உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும்.தாய் வழி சொத்து சம்பந்தமாக இருந்த பகைமை மறையும். தாயின் அன்பும் அரவணைப்பும் ஆசிர்வாதம் கிடைக்கும்.தாய் வழி சொத்தில் உள்ள கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சுமூகமாக தீரும். விலகிப் போன சொந்தங்கள் ஒன்று சேர்ந்து சொத்தை பகிர்ந்து கொள்வீர்கள்.வீடு, மனை, வாகன யோகம் பெறுவீர்கள். தன வரவை திட்டமிட்டு செயல் படுத்துவது உங்கள் கடமை. வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்து மறுபடியும் கடன் உருவாகமல் பார்ப்பது உங்கள் கடமை.நீதிமன்ற வழக்கு களில் இருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும் அல்லது தீர்ப்பு தள்ளிப்போகும். ஜனன கால ஜாதகத்தில் ஆறாமிடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசா,புத்தி நடந்தால் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.

திருமணம்

தனுசு ராசியினரின் குடும்ப ஸ்தானத்திற்கு குரு பார்வை இருப்பதால் அர்த்தாஷ்டமச் சனியின் தாக்கம் குறைந்து தடைபட்ட திருமண வாய்ப்புகள் கூடி வரும்.

பெண்கள்

குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். ீட்டில் அடிக்கடி மங்களகரமான விசேசங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.திருமண வாழ்வில் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும்.பிறந்த வீட்டாரும்,புகுந்த வீட்டாரும் ஒன்றாக கலகலப்பாக பழகுவார்கள். மாமியர், மருமகள் உறவு மகிழ்ச்சியாகஇருக்கும். பணப்புழக்கம்அதிகரிக்கும். நகைச் சீட்டு, ஏலச் சீட்டு என சேமிப்புகள் அதிகரிக்கும்.நகை புடவை என ஆடம்பர அழகு பொருட்கள் வாங்கி ஆனந்தமாக வாழ்வீர்கள். வாழ்க்கைத்துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம்.

முதலீட்டாளர்கள்

தொழில் அபிவிருத்தி செய்யும் எண்ணம் மிகும். அர்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதகம் அறிந்து புதிய தொழில் முயற்ச்சியில் ஈடுபடுவது நல்லது. வியாபாரம் சிறப்பாக நடைபெற்று பணவரவு இருந்தாலும் லாபம் நிற்காது. வேலைப்பழு மிகும். 9ல் கேது இருப்பதால் பொருளாதாரம் , பண பரிவர்த்தனை தொடர்பான வம்பு, வழக்கு வீட்டு கதவை தட்டி வரும்.எந்த பிரச்சனையாக இருந்தாலும் சட்டத்தை நாடாமல் இருப்பது நலம்.சட்டம் உங்களுக்கு சாதகமாக இல்லாத காலம் என்பதால் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என பிரச்சனைக்கு சம்பந்தம் பெற்ற நபருடன் நேரடியாக பேசி சமரசம் செய்ய முயற்சிக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள்: உத்தியோகத்தில் உள்ள வர்களுக்கு தொழில் மாற்றமும் .இட மாற்றமும் ஏற்படலாம். அரசுப் பணியாளர்கள் ஆதாயம் அடைவார்கள்.

ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு, வெளி நாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும். ஜனன கால ஜாதகத்தில் 9, 12ம் அதிபதியின் தசை அல்லது புத்தி நடந்து கொண்டு இருப்பவர்களாக இருந்தால் வெளிநாட்டு வாய்ப்பு ஜாதகருக்கு கூடி வரும். புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள். நண்பர்களுக்காக பணம் கடன் வாங்கி கொடுத்து அந்த கடனை நீங்களே ஏற்றுக் கொள்ள நேரும். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. சொத்துப்பத்திரத்தை அடமானம் வைத்து குறைந்த வட்டிக்கு கடன் பெற்று அதிக வட்டிக்கு கடன் கொடுக்கக்கூடாது.கொடுத்த பணம் திரும்ப வராது.

அரசியல்வாதிகள்

அரசியலில் முக்கிய பங்கு, பதவி வகிப்பீர்கள். நீங்கள் விரும்பிய பதவி உங்களை தேடி வரும். பட்டங்களும், பதக்கங்களும் வந்து குவியும். எதிர் கட்சியினர் உங்களுக்கு அடங்கி போவார்கள்.இந்த தேர்தலில் நீங்கள் போட்டியிட்டால் பெரும் வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெறுவீர்கள். குருபகவான் வக்ரம் அடையும் காலத்தில் நாற்காலி ஆடும் என்பதால் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பதவியின் தன்மையறிந்து பொறுப்பாக இருக்க வேண்டும்.

பரிகாரம்

மகாலட்சுமி தாயாருக்கு அவல், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் கலந்து படைத்து வழிபட பணப் புழக்கம் அதிகரித்து கடன் தொல்லை நீங்கும். வியாழக்கிழமை மதியம் 1- 2 குரு ஓரையில் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தை களுக்கு மஞ்சள் லட்டு தரவும். முறையான முன்னோர்கள் வழிபாடு அவசியம்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com