மீனம்- வார ராசிபலன் 9.8.2026 முதல் 15.8.2026 வரை

உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் நல்லபடியாக முடிவுக்கு வரப் போகிறது.
Meenam
Published on: 

மீனம்

புண்ணிய பலன்கள் நடக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி அதிபதி குரு பகவான் உச்சம் பெற்ற இந்த காலகட்டம் உங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். இது போன்ற கிரக நிலவரம் மீண்டும் 12 ஆண்டுகளுக்கு பிறகு உங்களுக்கு வரும். அக்டோபர் மாத குரு பகவான் இறுதியில் அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று விடுவார். வாழ்க்கையில் நடைபெற வேண்டிய அனைத்து சுப விஷயங்களுக்கும் முயற்சி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.வேலை தொழில் வியாபாரத்தில் போட்டிகளையும், சிக்கல்களையும் சந்தித்தவர்களின் நிலமை சாதகமாக மாறும். உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் நல்லபடியாக முடிவுக்கு வரப் போகிறது. தொழிலுக்கு அரசின் உதவி கிடைக்கும். முயற்சிக்கு குடும்ப உறுப்பினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பொருளாதார நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத தன லாபம் உண்டாகும்.வாழ்க்கைத் தரம் உயரும் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். எதையும் சமாளித்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய சொத்துக்கள் சேரும்.குல இஷ்ட தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த காலம். ஆடி அமாவாசை அன்று புனித நீர் நிலைகளில் நீராடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com