மீனம்- வார ராசிபலன் 14.6.2026 முதல் 20.6.2026 வரை

குலதெய்வ அனுகிரகம், பூர்வீகச் சொத்து ஆதாயம் போன்ற நல்ல பலன்கள் நடக்கும்.
Meenam weekly rasipalan
மீனம்- வார ராசிபலன்
Published on

மீனம்

விபரீத ராஜயோகமான நேரம். ராசி அதிபதி குருபகவான் அஷ்டமாதிபதி சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். ஜோதிடம், கலைத்துறை, வங்கித்துறை, பங்குச்சந்தை, வணிகம் போன்ற பல துறைகளின் மூலம் நல்ல வாய்ப்புகள் தேடிவரும். தகவல் தொடர்பு சாதனங்களை மூலம் வருமானம் உண்டாகும். எதிர்பாராத யோகத்தால் அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும். அதிர்ஷ்டப் பணம், லாட்டரி, உயில் சொத்து, பங்குச் சந்தை ஆதாயம் கிடைக்கும். தொட்டது துலங்கும். சிறிய உழைப்பில் பெரிய வருமானம், ஆதாயம் உண்டாகும்.

குலதெய்வ அனுகிரகம், பூர்வீகச் சொத்து ஆதாயம் போன்ற நல்ல பலன்கள் நடக்கும். சிலருக்கு தவறான காதல், பங்குச் சந்தையால் வாழ்க்கைப் பாதையை தடம் புரளும். சிலருக்கு வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் இருக்கும். அலைச்சல் டென்ஷன் சற்று அதிகமாகும். சிலர் தொழில் நிமித்தமாக குறுகிய காலம் குடும்பத்தை பிரிந்து வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். ஜென்மச் சனியால் திருமணம் தடைபடாது. கோச்சாரம் சாதகமாக உள்ளது. அதிகப்படியான திருமணம் நிச்சயமாகும். வியாழக்கிழமை கடலை உருண்டை தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com