மீனம்- 2026 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்

திருமண முயற்சிகள் முன்னுக்கு பின் முரணாக இருக்கும்.
Meenam
Published on

குருவின் ஆசி பெற்ற மீன ராசியினரே,

மீன ராசிக்கு லாபஸ்தான அதிபதி மற்றும் விரய ஸ்தான அதிபதியான சனி பகவான் 27.7.2026 முதல் 10.12.2026 வரையில் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். ஜென்ம சனியின் தாக்கம் குறையும்.

உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். நீண்ட நாட்களாக அவதிப்படுத்திய நோய்க்கு நிவாரண காலம். திருமண முயற்சிகள் முன்னுக்கு பின் முரணாக இருக்கும்.

பூர்வீகம்

வேலை பார்த்த இடத்தில் சக ஊழியர்கள், உயர் அதிகாரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவிற்கு வரும். இதுவரை இருந்த காரியத் தடைகள் நீங்கி குடும்பத்தில் அமைதியான சூழல் உருவாகும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். வீடு கட்டுதல், வாங்குதல், சொத்துக்களை விற்றல் தொடர்பான பணிகள் தடையில்லாமல் நடந்து முடியும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சுப விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உடலுக்கும் ஆன்மாவிற்கும் புத்துணர்வு கிடைக்கும். வெற்றியை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள். அனைத்து செயல்களையும் பல கோணத்தில் ஆய்வு செய்து யார் மூலம் எப்படி அணுக வேண்டுமென திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள்.

எடுத்த காரியத்தைசிறப்புடன் செயல்படுத்த தேவையான ஞானம் பெருகும். புகழ் கிடைக்கும். அவரவர் வயதிற்கேற்ப அவரவர் துறையில் சாதனைகள் செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். பொருளாதார முன்னேற்றம் மகிழ்ச்சியை கொடுக்கும். சேமிப்புகள் மற்றும் முதலீடுகள் அதிகரிக்கும். ஆயுள், ஆரோக்கியம் மகிழ்ச்சியைத் தரும். இதுவரை வாழ்வில் செட்டிலாகாத மீன ராசியினர் வாழ்வில் செட்டிலாகப்போகிறார்கள்.

வருமானம்

நல்ல தொழிலாளிகள் கிடைக்கப் பெற்று அதன் மூலமும் அதிர்ஷ்ட வருமானம் கிடைக்கும். தொழில், பங்குச் சந்தை, உயில் சொத்து என எந்த வழியில் எவ்வளவு பணம் வருகிறது என்றே கணக்கிட முடியாது. பொன், பொருள் சேர்க்கைமிகுதியாக இருக்கும். உங்கள் அம்மா, அப்பாவின் ஆதரவை பெற்று உங்கள் மூத்த சகோதர, சகோதரிகளின் பங்ககையும் சேர்த்து அடைவீர்கள்.

சனிபகவான் ரேவதி நட்சத்திர சாரத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலம் (27.7.2026 முதல் 9.10.2026 வரை) மீன ராசிக்கு 4,7ம் அதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் வக்ர கதியில் சஞ்சரிக்கும் காலம் உங்களின் முயற்சிகள் யாவும் வெற்றியை பெற்றுத் தரும். இது வரை வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்த உங்கள் திறமைகள் தகவல் தொடர்பு மீடியாக்களான டி.வி,யூ டியூப், பத்திரிக்கை மூலம் உங்கள் பெயர் புகழ் பரவும். வேற்று மதத்தினரின் நட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கிடைக்கும். செய்தித்துறை, போக்குவரத்து துறை, வானொலி, தொலைக்காட்சி சம்பந்தம் பெற்றவர்களுக்கு ஏற்றம் மிகுதியாக இருக்கும். அடகு வைத்த நகைகள் மீண்டு வரும்.புதிய நகை, ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். திருடு போன பொருட்கள் கிடைக்கும். அங்கீகாரம் இல்லாத வீட்டு மனை சொத்து வைத்து இருப்பவர்கள் அப்ரூவல் வாங்க ஏற்ற காலம். தொலைந்து போன ஆவணங்கள், பத்திரங்கள் திரும்ப கிடைக்கும்.

சனி பகவான்

வாழ்க்கைத் துணை மூலம், மாமனார் வகையில் அதிர்ஷ்டம் கிடைக்கும். உயர் கல்வி படிப்பவர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற அதிகாரப் பணித் தேர்வில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். தலைவலி, நரம்பு தொடர்பான பிரச்சனைகள் சீராகும். ஞாபகசக்தி அதிகரிக்கும். சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலம் (10.10.2026 முதல் 10.12.2026 வரை) சனிபகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதியில் வக்கிரகதியில் சஞ்சரிக்கும் காலம் நல்ல திறமையும் தகுதியும் வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். தொழிலை விரிவுபடுத்த மற்றும் ரொட்டேஷனுக்கு தேவையான கடன் அரசுடமை வங்கிகள் மூலம் கிடைக்கும்.

புதிய கடன் வாங்கி பழைய கடன் அடைப்பீர்கள். வாழ்க்கைத் துணைக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். தந்தையின் மூலம் பெரும் பணம் கிடைக்கும். கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் திணறியவர்களுக்கு இடைக்கால நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு வேலையாட்களால் பொருள் திருடு போகும்.எதிரிகள் தொல்லை குறையும். நோய் தாக்கம் கட்டுக்குள் இருக்கும். சரும நோய் தொல்லை தீரும். குழந்தைகளால் ஏற்பட்ட மனக் கவலை தீரும். சிலர் ஜோதிடம் மாந்தரீகம் கற்ப்பார்கள். லெளகீக நாட்டம் குறையும்.ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். ஆன்மீகச் சொற்பொழிவுகளில் கலந்து கொள்வீர்கள். இஷ்ட, குல. உபாசனை தெய்வ வழிபாடு பலிதமாகும் காலம். ஆலயத் திருப்பணி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு தர்ம காரியங்களில் நாட்டம் ஏற்படும்.

திருமணம்

ஒருதலைக் காதலாக இருந்த உங்களின் காதலுக்கு இப்பொழுது கீரின் சிக்னல் கிடைக்கும். பெற்றோர்களின் எதிர்ப்பும் சேர்ந்து வரும். திருமண வயதைக் கடந்தும் திருமணமாகாத பலருக்கு காதல் கலப்புத் திருமணம் நடக்கும். பெண்கள்-புதிய தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் உங்கள் திறமை மிளிரும் காலம். பல பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுவின் உதவியுடன் புதிய தொழில் முனைவர் களாக மாறுவார்கள். கணவர் மற்றும் குழந்தைகளின் முழுமையான அன்பை உணர்வீர்கள். தாய் வழிச் சொத்தும் நல்லாசிகளும் தேடி வரும். வீடு,வாகனம், நிலம், ஆபரணம், அந்தஸ்து,பதவி, சமுதாய அங்கீகாரம் என உங்கள் வாழ்நாள் கனவுகள் அனைத்தும் ஈடேறும்.

முதலீட்டாளர்கள்

சுய தொழில் இருப்பவர்களுக்கு அபாரமான வளர்ச்சி இருக்கும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். ஒரு தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இரண்டு தொழில் செய்யும் எண்ணம் வரும் பல புதிய தொழில் முனைவோர்கள் உருவாகுவார்கள். தொழிலுக்குத் தேவையான பணப்புழக்கம் சரளமாக இருக்கும் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்கள் கடனிலிருந்து மீளும்.சிறிய முதலீட்டில் பெரிய லாபம் தேடி வரும்.கூட்டுத்தொழில் நன்மை தரும்.புதிய தொழில் முதலீடுகள், தொழில் ஒப்பந்தங்கள் செய்ய ஏற்ற காலம். உத்தியோகஸ்தர்கள்- உத்தியோகத்தில் இருக்கும் மன உளைச்சல் நீங்கும். உத்யோகத்தில் ஸ்திரத்தன்மை ஏற்படும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். மெமோ வாங்கியவர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அன்பும் பாராட்டும் கிடைக்கும் .அலுவலகமே வியக்கும் வகையில் உங்கள் திறமை வெளிப்படும். பிடிக்காத இடத்தில் வேலை பார்த்தவர்களுக்கு வேறு நல்ல வேலை கிடைக்கும். ஏதேனும் காரணத்தால் இதுவரை ஊதியம் வராமல் தடைபட்டு இருந்தால் மொத்தமாக வந்துவிடும்.

அரசியல்வாதிகள்

மீனராசி அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான நேரம். குருவருளும், குல தெய்வமும் நீங்கள் விரும்பியதை வழங்க தயாராக இருக்கிறார்கள். மக்கள் மனதில் இடம்பிடிக்க அயராது உழைத்து வெற்றியும் காண்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பதவி உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.. உங்களது சமுக அந்தஸ்து உயரும். நீங்கள் சார்ந்து இருக்கும் இயக்கத்தால் உங்களுக்கு மதிப்பு, மரியாதை உயரும். ஒரு சிலருக்கு கெளவுரவப் பதவிகள் தேடி வரும்.

பரிகாரம்

தினமும் சிவபுராணம் படிக்க சாதகமான செய்தி வரும். செவ்வாய்க்கிழமை ராகு காலமான மதியம் 3 - 4 மணிக்குள் வீட்டில் ஒன்பது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி முருகப் பெருமானை வழிபட வேண்டும். தினமும் விலங்குள் மற்றும் பட்சிகளுக்கு உணவிட முன்னேற்றம் அதிகரிக்கும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com