சிம்மம்- 2026 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்

தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால் அனுகூலமான பலன்கள் உண்டு.
Simmam
Published on

நிர்வாக திறமை நிறைந்த சிம்ம ராசியினரே!

சிம்ம ராசிக்கு 6,7ம் அதிபதி யான சனி பகவான் கோட்ச்சாரத்தில் ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டமஸ்தானத்தில் 27.7.2026 முதல் 10.12.2026 வரை வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். அஷ்டமச் சனியின் தாக்கம் வெகுவாக குறையும்.உங்களின் எண்ணங்கள், முயற்சிகள் உயர்வானதாக இருக்கும். நீண்ட காலமாக முடங்கி கிடந்த அனைத்து காரியங்களும் வெற்றியைத் தரும். ஞாபகசக்தி அதிகரிக்கும்.பாகப் பிரிவினை மற்றும் சொத்து தொடர்பான கோர்ட், கேஸ் பிரச்சனையில் சாதகமான தீர்ப்பு வரும் அல்லது உடன் பிறந்தவர்கள் ஒன்று கூடி பேசி முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பொன், பொருள் ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். மன சஞ்சலத்தால் வேறு மதத்திற்கு மாறியவர்கள் மீண்டு சொந்த மதத்திற்கு மாறுவார்கள். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும்.கணவன் மனைவி உறவில் ஏற்பட்ட சச்சரவுகள் சீராகும். விவாகரத்து வரை சென்று வழக்குகளில் திருப்பம் ஏற்படும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால் அனுகூலமான பலன்கள் உண்டு.

அஷ்டமச் சனி முழுமையாக முடியும் வரை திருமணம் தொடர்பான விஷயங்களை ஒத்தி வைப்பது நல்லது. புதிய கூட்டுத் தொழிலிலை தவிர்க்கவும்.உடல் நலனில் நிலவிய பாதிப்புகள், மனசஞ்சலம் அகலும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக் கவலைகள் குறையத் துவங்கும். பூர்வீகச் சொத்து மற்றும் பாகப் பிரிவினையில் மாற்றுக் கருத்துக்கள் பேச்சு வார்த்தையில் சீராகலாம். வழக்கம் போல் தொழிலில் நல்ல முன்னேற்றப் போக்கு தென்படும். காப்பீட்டு பணம், அதிர்ஷ்ட பணம், சொத்துக்கள் கிடைக்கலாம். தந்தையின் ஆசிகளையும், ஆஸ்திகளையும் பெற்றுத் தருவார். எந்த மாயமும்,எதிர்ப்பும் இல்லாமல் தந்தை வழி பூர்வீகச் சொத்துகள் எளிமையாக உங்கள் பெயருக்கு மாறிவிடும். அல்லது வெளிநாட்டில் வசிக்கும் உங்களின் மூத்த சகோதரர் பூர்வீகச் சொத்தை உங்களுக்கு விட்டுக் கொடுப்பார்.

சனிபகவான் ரேவதி நட்சத்திர சாரத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலம் (27.7.2026 முதல் 9.10.2026 வரை)

சிம்ம ராசிக்கு தன லாபாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் வக்கிரமடையும் காலத்தில் அரசு சார்ந்த நிதி நிறுவனங்கள் பெரிய தொகையை கடன் கொடுக்க உங்கள் வீடு தேடி வருவார்கள், அல்லது உங்களின் பூர்வீகச் சொத்துக்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டு அதன் மூலம் பெரிய பணம்கிடைக்கும். தந்தைக்கு தடைபட்ட அரசின் உதவித் தொகை கிடைக்கும். தந்தையின் ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். தந்தைக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவதாக மீடியாக்களில் வரும் விளம்பரத்தை பார்த்து அதிர்ஷ்டப் பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். உங்கள் மனதையும், ஆன்மாவையும் வலிமைப்படுத்தும் யோகா, மூச்சுப் பயிற்சிகளை கற்றுக் கொள்ளவீர்கள். ஒரு சிலர் மன அழுத்தத்தை குறைத்து புத்துணர்ச்சியை பெற்றுத் தரும் மன வளக்கலை மையங்களுக்கு சென்று ஓய்வு எடுத்து திரும்புவீர்கள்.சிலர் உடல் சூட்டை தணித்து உடலை குளுமைப் படுத்தும் புனித நீர் நிலைகளுக்கு சென்று நீராடுவார்கள். உங்களின் பெயர்,புகழ் வெளியுலகத்தில் பரவும்.தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் உங்கள் பெயர் பரவலாக பேசப்படும். உங்கள் ஏரியாவில் நடக்கும் நல்லது,கெட்டதிற்கு நீங்கள் தான் ஹீரோ.திடீர் பெயர்,புகழலால் மகிழ்ச்சி உங்களை வழி நடத்தும்.

சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலம் (10.10.2026 முதல் 10.12.2026 வரை)

சிம்ம ராசிக்கு 6,7ம் அதிபதியான சனிபகவான் தனது சொந்த நட்சத்திரத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கும் நாட்களில்இதுவரை தடைபட்ட பாக்கிய,புண்ணிய பலன்கள் அனைத்தையும் நடத்தி வைப்பார். கெளரவப் பதவிகள் தேடி வரும்.இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து உற்றார் உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.தடைபட்ட பித்ருக்கள் வழிபாட்டை துவங்குவீர்கள். ஜோதிடம், மாந்தரீகம் ,தியானம் கற்கும் ஆர்வம் அதிகரிக்கும். அக்குபஞ்சர் மலர் மருத்துவம், இயற்கை மருத்துவம் கற்க ஆர்வம் உண்டாகும்.பலருக்கு காதல் ஆரம்பமாகும்.காதலுக்கு தடை விதித்த பெற்றோர்கள் க்ரீன் சிக்னல் காட்டுவார்கள். முதியவர்களுக்கு வாரிசுகளின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும். வாரிசு , குழந்தை பாக்கியம் கிடைக்கும். ராசியில் கேது இருப்பதால் கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொட்டது துலங்கும். தொழில் ஞானம், ஆர்வம் அதிகரிக்கும். கண் திருஷ்டி,மன நல பாதிப்பு, செய்வினை கோளாறு, பய உணர்வு, மாந்தரீக பாதிப்பு அகலும். மன சஞ்சலத்தை அதிகப்படுத்திய கோர்ட் பிரச்சனையை சாதகமாகும். வெளிநாட்டிற்கு இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பை ஏற்படும். கலைத்துறையினர் ஏற்றம் பெறுவார்கள். கணுக்கால் பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்ற காலம். செல்லப் பிராணிகள் வளர்க்கும் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்தில் பிரச்சனை இருப்பவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக ஏற்ற காலம்.

திருமணம்

ராசியில் கேதுவும் ஏழில் ராகும் நிற்பது சர்பதோஷமாகும். மேலும் சனிபகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலங்களில் விபரீத விளைவுகள் ஏற்படலாம் என்பதால் திருமணத்தை தவிர்க்கவும்.

பெண்கள்

பல பெண்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் உயர் கல்வி கற்பது ஆன்லைனில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சம்பாதிப்பது என பிசியாக இருப்பீர்கள். கணவன, மனைவி உறவு மகிழ்வை தரும் கணவனுக்கு தெரியாமல் கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். சிலர் பொய்யான வாக்கு கொடுத்து உங்களிடம் பணம் பெற்று தொழிலில் முதலீடு என்ற பெயரில் ஏமாற்ற வாய்ப்புள்ளது.நம்பிக்கையின் . பெயரில் கொடுத்த பணம் திரும்ப வராது. பெரும் இழப்பீட்டை புத்தியை பயன்படுத்தினால் தவிர்க்க முடியும்.விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை பத்திரமாக பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும்.

முதலீட்டாளர்கள்

முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். திட்டங்களும் கனவுகளும் வெற்றி பெறும்.விரயமும், துயரமுமான நிலை மாறும்.கொள்கை, கோட்பாடுடன் செயல்படுவீர்கள். தொழிலில் வெற்றியும், முன்னேற்றமும், லாபமும் உண்டாகும். தொழிலிலில் முன்னேற்றம் இருக்கும். இதுவரையில் யோசிக்காத வகையில் விவேகமாக சிந்தனை செய்து தொழிலை வளப்படுத்துவீர்கள். தொழில் போட்டியாளர்கள் விலகுவார்கள். தொழில் விருத்தி குடும்பத் தேவை மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு விண்ணப்பித்த கடன் உதவி கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள்

வேலை பார்க்கும் இடத்தில் சிக்கலில் மாட்டி விடலாம். யாரோ செய்த தவறுக்கு நீங்கள் தண்டனையை அனுபவிக்க நேரும்.கிரகங்கள் சாதகமாக இல்லாத காலத்தில் மனிதனுக்கு பொறுமையும் தன்னடக்கமும் மிக அவசியம். இடமாற்றம் இருந்தாலும் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்காது.மேலதிகாரியின் தொல்லை அதிகரிக்கும்.சிலர் லஞ்ச ஊழலில் மாட்ட வாய்ப்புள்ளது. தனியார் துறையில் இருப்பவர்கள் குடும்ப நலன் கருதி வேலையில் பொறுப்போடு இருப்பது நல்லது.

அரசியல்வாதிகள்

பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான நேரம். மக்கள் மனதில் இடம்பிடிக்க அயராது உழைத்து வெற்றியும் காண்மீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பதவி உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சமூக அந்தஸ்து உயரும் . நீங்கள் சார்ந்து இருக்கும் இயக்கத்தால் உங்களுக்கு மதிப்பு , மரியாதை உயரும். மிகுதியான சுபமும் குறைவான அசுபமும் நடக்கும். திடீர் லாபம் கிடைக்கும். ஆனால் சரியான நேரத்திற்கு வீட்டு உணவை உண்ண முடியாமல் காலம் தாழ்த்தி கிடைத்த உணவை உண்டு காலம் கடத்த நேரும்.

பரிகாரம்

சுப பலனை அதிகரிக்க தினமும் ஸ்ரீ ருத்ரம் படிக்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும். வியாழக்கி ழமைகளில் சிவன் கோவிலின் துப்புரவு பணியில் ஈடுபட்டு வர சொத்தால் ஏற்படும் மன உளைச்சல் தீரும். வீண் விரயத்தை குறைத்து சேமிப்பை உயர்த்த தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான பிரதோச காலத்தில் குத்து விளக்கு ஏற்றி மகாலஷ்மியை வழிபட வேண்டும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com