மிதுனம்- வார ராசிபலன் 7.6.2026 முதல் 13.6.2026 வரை

வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மிதுனம் வார ராசிபலன்
மிதுனம்- வார ராசிபலன்
Published on

மிதுனம்

வருமானப் பற்றாக்குறை அகலும் வாரம். ராசி அதிபதி புதன் ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார்.குடும்பத்தில் உங்கள் பேச்சிற்கு மதிப்பு, மரியாதை கிடைக்கும். புதிய தொழில்களை தேர்வு செய்து படிப்படியாக உயர்ந்து வெற்றி பெறுவீர்கள். மதி நுட்பமான காரியங்களால் எல்லோரது நன்மதிப்பையும் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.தனி அடையாளத்துடன் இருப்பீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமை தரும்.

குழந்தை பாக்கியம் உண்டாகும். சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய கூட்டாளிகள் விலகி புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அடமானச் சொத்துக்கள் நகைகளை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் அமையும்.

பழைய சொத்தை விற்றுவிட்டு புதிய சொத்து வாங்கத் திட்டமிடுவீர்கள். கடன் தொல்லையிலிருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். நோய் தாக்கம் வெகுவாக குறையும். வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சேமிக்கும் வகையில் வருமானம் உயரும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பிரதோஷ நாளன்று சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்யவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி,

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com