மிதுனம்- வார ராசிபலன் 14.6.2026 முதல் 20.6.2026 வரை

புதிய தொழில், கூட்டுத் தொழில் துவங்க உகந்த காலம்.
Mithunam weekly rasipalan
மிதுனம் வார ராசிபலன்
Published on

மிதுனம்

சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். ராசி அதிபதி புதன் ஆட்சி பலம் பெறுகிறார். ஜென்ம குருவால் ஏற்பட்ட சோதனைகள் குறையும். தோற்றப்பொலிவு மற்றும் பழக்க வழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும். காதலால் ஏற்பட்ட மன சஞ்சலம் சீராகும். குல இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். அனைத்து விதமான சுப பலன்களும் நடக்கும். ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சமாளித்து விடுவீர்கள்.

புதிய தொழில், கூட்டுத் தொழில் துவங்க உகந்த காலம். அதிர்ஷ்டம் மற்றும் ஆடம்பரத்தின் மீது ஆர்வம் கூடும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும்.திருமணத் தடை அகலும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களில் நிலவிய தடைகள், தாமதங்கள் அகலும். இளைய சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும் .வேற்று மொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினரின் நட்பு மற்றும் உதவிகள், ஆதாயம் கிடைக்கும்.காதல் முயற்சிகளால் அவப்பெயர் உண்டாகும்.எதிர்பாலின நட்பை தவிர்க்கவும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். புதன்கிழமை பச்சைபயிறு தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com