மிதுனம்- வார ராசிபலன் 2.8.2026 முதல் 8.8.2026 வரை

சிலருக்கு திடீர் ஜாக்பாட் மூலம் பண வருவாய் அதிகரிக்கும்.
Mithunam
Published on

மிதுனம்

பொருளாதாரத் தேவைகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பணபர ஸ்தானம் பலம் பெறுவதால் வர வேண்டிய கடன் வசூலாகும். கொடுக்க வேண்டிய கடனை திரும்ப செலுத்து வீர்கள். சிலருக்கு திடீர் ஜாக்பாட் மூலம் பண வருவாய் அதிகரிக்கும். தடைபட்ட பணவரவு சீராகும். சாதிக்கும் எண்ணம் மேலோங்கும். திருமணத்தடை விலகும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். சிலருக்கு மறுமணத்திற்கும் வரன் கிடைக்கும். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். சொத்து வாங்கும் முயற்சிகள் சித்திக்கும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். திருமண வாய்ப்புகள் தேடி வரும். ஆரோக்கியம் சிறக்கும். பண விசயத்தில் யாரையும் நம்பக் கூடாது. வீடு, வாகனம், பிள்ளைகளின் திருமணம், படிப்பு, நகை வாங்குவது என விரயத்தை சுப செலவாக முதலீடாக மாற்றுவது நல்லது.ஆடி வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி சமேத மகாவிஷ்ணுவை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com