

நிலையான வருமானத்திற்கு வழி பிறக்கும் வாரம். ராசி அதிபதி புதன் வக்ர நிவர்த்தி அடைந்து ராசியில் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். துன்பமும், துயரமும் தீரும். குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் காலத்திற்கும் நிலைக்கும் அழியாப் புகழ் உண்டாகும். பெயர், புகழ், அந்தஸ்து கவுரவும் உயரும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். தொழில் உத்தியோக நிமித்தமாக இடப் பெயர்ச்சி செய்ய நேரும். புத்தி சாலித்தனமாக செயல்பட்டு, திட்டமிட்டு லாபம் சம்பாதிப்பீர்கள். வீடு, வாகன, யோகம் உண்டாகும். சீட்டுக் கட்டி இழந்த பணம், ஜாமீன் போட்டு ஏமாந்த பணம் கிடைத்து விடும். சுப கிரக வலுவால் வீண் நஷ்டம், பயம் தீரும். சுகமான ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும். சிலருக்கு தேவையற்ற கடன் உருவாகலாம். 28.7.2026 அன்று இரவு 7.49 மணி முதல் 31.7.2026 அன்று காலை 6.38 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குறுக்கு வழியில் வருமானம் ஈட்டுவது, தவறான நட்பு போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. பேச்சில் பய உணர்வும், இயலாமையும் வெளிப்படும். ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு வேப்பிலை மாலை சாற்றி வழிபடவும்.