

மிதுன ராசிக்கு 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் கோச்சாரத்தில் சனிபகவான் சஞ்சரிக்கிறார். ராசிக்கு 8, 9 அதிபதியான சனிபகவான் 27.7.2026 முதல் 10.12.2026 வரை வக்ர கதியில் சஞ்சரிக்கிறார். மனக்குழப்பம் மன சஞ்சலத்தை அகற்றுவார். ஆன்ம ஞானம் பெருகும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.முயற்சிப் பலிதம் உண்டு.எதையும் தாங்கும் மனப்பக்குவம் உருவாகும். ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும். தந்தையுடன் தர்க்கம் செய்வதை தவிர்க்கவும். விபத்து கண்டம் சர்ஜரி அவமானம் வம்பு வழக்கு போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும். தனிமை உணர்வு நீங்கும். தொழில் போட்டிகள் உருவாகலாம். அலைச்சல் வேலைப் பளு அதிகமாகும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம். லாபம் சற்று ஏற்ற, இறக்கமாக இருக்கும். சிலர் தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாடு செல்லலாம்.
தொழிலை தக்க வைத்துக்கொள்ள சில முதலீடுகள் செய்ய நேரிடும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். ஒரு சிலருக்கு அரசின் இலவச வீட்டு மனைத்திட்டத்தில் வீடு அல்லது நிலம் கிடைக்கும். வீட்டிற்கு போரிங் போடுவீர்கள். அண்டை அயலாருடன் இருந்த சண்டை சஞ்சரவு, எல்லைத் தகராறு முடிவுக்கு வரும். உடல் உஷ்ணம் குறையும். தாயின் ஆரோக்கியம் சீராகும். கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்கத் துவங்குவார்கள். சிலருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும்.
மிதுன ராசிக்கு ராசி அதிபதி மற்றும் சுக ஸ்தான அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ர கதியில் சஞ்சரிக்கும் காலம் இதுவரை துக்கத்தால் தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு தூக்க மாத்திரையின்றி நிம்மதியான தூக்கம் வரும்.இல்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மருத்தவமனையில் தங்கி சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்புவார்கள்.கையிருப்பு மற்றும் சேமிப்புகள் கரையும்.உங்கள் சேமிப்புகள் சுப விரயங்களான திருமணம், சொத்து போன்றவைகளுக்காகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.தூர தேசங்களுக்கு ஆன்மீகச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமான காலம்.மிகக் குறிப்பாக ஜோதிடர்கள்,மார்க்கெட்டிங், வக்கீல் தொழில் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு பொற்காலம். வாக்கு பலிதம் உண்டாகும்.இது வரை ஐந்துக்கும் பத்துக்கும் அள்ளாடியவர்களுக்கு கூட கையில் சரளமாக பணம் புரளும்.பணவரவு பல மடங்கு அதிகரிக்கும்.நிரந்தர வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். வேலை இழந்த வெளிநாட்டு வாசிகளுக்கு மீண்டும் விரும்பிய வேலை கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை நிறைவு செய்வீர்கள். பாராமுகமாக இருந்த குடும்ப உறவுகள் உங்களுக்கு மதிப்பு மரியாதை கொடுக்கும். நேரத்திற்கு சூடான, சுவையான உணவு சாப்பிட முடியும்.உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.பெற்றோர்களுக்கு செய்த மருத்துவச் செலவு குறையும். வீட்டிற்கு தேவையான அதிநவீன பொருட்களை வாங்குவீர்கள். சொத்து,வீடு,வாகனம் என உங்கள் ஆழ்மன எண்ணமும் ஆசையும் அதிகரிக்கும்.ஜனன கால ஜாதகத்தில் பாதகமான தசா.புத்தி இருப்பவர்கள் புதிய சொத்து பற்றிய எண்ணத்தை ஒத்திப் போடுவதே நல்லது.
மிதுன ராசிக்கு 8,9ம் அதிபதியான சனி பகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதியில் சஞ்சரிக்கும் பொழுது நோயிலிருந்து இடைக்கால நிவாரணம் வழங்குவார். நாட்பட்ட வியாதிகளின் தன்மை புரியும். எந்த முறை வைத்தியம் சிறந்தது என்று புரியும்.உங்கள் மீது போடப்பட்ட வழக்கில் தீர்ப்பு சாதகமாகும் அல்லது தண்டனைக் காலம் குறையும். தாய்மாமனுடன் இருந்த மனஸ்தாபம் குறையும். மூத்த சகோதர வகையில் ஆதாயம் உண்டு. இளைய மனைவியின் மூலம் சொத்து கிடைக்கும்.ஒரு சிலர் விருப்ப ஓய்வு பெறுவார்கள். பாலிசி முதிர்வு தொகை, எதிர்பாராத பண வரவு உண்டு.தொழில் கூட்டாளிகள் அல்லது வாழ்க்கை துணையால் வம்பு , வழக்கு உருவாகலாம். மேலும் இந்த காலகட்டத்தில் யாருக்கும் ஜாமீன் போடக் கூடாது.வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு,தாய் வழியில் வரவேண்டிய சொத்தை நினைத்து மனதை வருத்தி உடல் ஆரோக்கியத்தை கெடுக்க கூடாது. சிறிய மனசஞ்சலம் மற்றும் வாக்குவாதத்திற்கு பிறகே தாய்வழி சொத்து வந்து சேரும். நம்பிக்கையும், தைரியமும் மனிதனுக்கு மிக முக்கியம். நம்பிக்கையும் நிதானமும் இருந்தால் வெற்றி உங்களுக்கே .உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்க வேண்டும். கோபத்தை குறைக்க வேண்டும்.இது போல் ஒவ்வொரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
இந்த காலகட்டங்களில் 2,3ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் மனதிற்கு பிடித்த நல்ல வரனை அமைத்து தருவார்.
விடா முயற்சியும் தைரியமும் மேலோங்கி அனைத்து பிரச்சனைகளையும் நீங்கள் ஒருவராகவே தனியாக நின்று சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். உங்களை உதாசீனம் செய்த இளைய சகோதர,சகோதரியிடம் இணக்கம் உண்டாகும். புத்தாடை மற்றும் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கும் யோகம் கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். தொழில்,உத்தியோகம்,கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள்.வங்கியில் புதிய கணக்கு துவங்கலாம். காணமல் போன ஆபரணங்கள் கிடைக்கும். கள்ளம் கபடம் இல்லாமல் குடும்ப விஷயத்தை வேறு ஆண்களிடம் பகிரக் கூடாது.
வழக்கத்தை விட வருமானம் அதிகமாக இருக்கும். வருமானத்தை விட விரயத்தை பல மடங்காக அதிகப்படுத்துவார்.வருமானம் எங்கு போனது என்ற நிதானம் இருக்காது. தொழிலை விரிவுபடுத்தவும் , புதிய தொழில் ஒப்பந்தம் செய்யவும் ஏற்ற காலம் அல்ல. கூட்டாளிகள் பிரிந்து செல்லலாம். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்கள் பணப்பரிவர்தனையில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் தேவைக்கு அதிகமாக கடன்பட்டால் நிலைத்து நிற்பது கடினம்.
தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் மீண்டும் வேலை பெறுவீர்கள். அரசு ஊழியர்கள் கவனத்துடன் செயல்பட பேண்டும். எதிர்பாரத விருப்பமில்லாத இடத்திற்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வுடன் சென்று வேலை பார்க்க நேரும். லஞ்ச ஊழலில் சிக்கும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகம் இருந்தாலும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உங்களை மகிழ வைக்கும்.
முக்கிய வாக்குறுதியில் மிகுந்த கவனம் தேவை. உங்களின் வாக்கே உங்களை கட்டம் கட்டி கூண்டில் ஏற்றும் .யாரிடம் பேசினாலும் வார்த்தைப்பிரயோகம் சரியாக இருக்க வேண்டும். நிதானம் தவறினால் உங்களின் பல ஆண்டு கால உழைப்பை இழக்க நேரும்.புத்தியை பயன்படுத்த வேண்டிய நேரம்.ஒரு சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வேறு கட்சிக்கு மாறவும் வாய்ப்புள்ளது.
வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும். எத்தகைய கிரக தோஷமாக இருந்தாலும் வீட்டு பூஜை அறையில் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். புதன் கிழமை பச்சைப்பயிறு தானம் வழங்கவும்.