மிதுனம்- 2026 ஆனி மாத ராசிபலன்

குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியம் தானாக நடைபெறும்.
mithunam
மிதுனம் ஆனி மாத ராசிபலன்
Published on

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஆளி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு சகாய ஸ்தானாதிபதி சூரியன் இணைந்து 'புத ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். இதுவரை உங்கள் ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இப்பொழுது 2-ம் இடத்தில் சஞ்சரித்து உச்சம் பெறுகிறார். தன ஸ்தானத்தில் குரு உச்சம் பெறுவதால் தனவரவு திருப்திகரமாக இருக்கும். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியம் தானாக நடைபெறும், கொடுக்கல் வாங்கல்களில் இருந்த இடர்பாடுகள் அகலும்.

ரிஷப செவ்வாய்

ஆனி மாதம் 5-6 தேதி (19/6.2026) அன்று ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய் ஸாபா நிபதியாக விளங்கும் அவர். விரய ஸ்தானத்திற்கு வரும்போது விரயம் அதிகரிக்கும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். சுபச் செலவுகளை மேற்கொள்வதன் மூலம் மீண் விரயங்களில் இருந்து விடுபடலாம். குடும்பத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கலாம். பத்திரப் பதிவில் இருந்த இடையூறு அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடினமான நேரம் இது சோதனைக் காலம் என்று கூடச்சொல்லலாம். உயர் அதிகாரிகள் உங்களுக்கு பணிச்சுமையை அதிகமாகக் கொடுப்பர். திசாபுத்தி பலம் இழந்தவர்களுக்கு, உத்தியோகத்தில் இருந்து விலகிச் செல்லும் சூழல் உருவாகும்.

சிம்ம சுக்ரன்

ஆனி 21-ந் தேதி (5.7.2026) அன்று சிம்ம ராசிக்கு சுகரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம விரயாதிபதியானவர் சுக்ரன். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும்போது, பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்க ஒரு பெரும் தொகையை செலவிடுவீர்கள். குறிப்பாக பிள்ளைகளின் மேற்படிப்பிற்காகவோ. வெளிநாடு சென்று பணிபுரிவதற்காகவோ. நீங்கள் செய்யும் புதுமுயற்சியில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை பாகப்பிரிவினை செய்துகொண்டு உங்களுக்கு கிடைத்த பங்கில் என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள். சகோதர வர்க்கத்தினரின் ஆதரவு திருப்தி தரும். அதிகப் பயணங்களின் விளைவாக ஆரோக்கியத் தொல்லைகள் உண்டு.

சனி வக்ரம்

ஆணி 31-ந் தேதி (15.7.2026) அன்று மீள ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதி மற்றும் பாக்கியாதிபதியான அவர், தனது வக்ர காலத்தில் நன்மைகளைத் தொடர்ந்து செய்தாலும் ஒருசில சமயங்களில் இனம்புரியாத கவலைக்கு ஆட்படுத்திவிடுவார். குரு பகவான் வீட்டில் சனி பகவான் சஞ்சரிப்பதால் குருவின் பார்வை அவர் மீது பதிகிறது. எனவே பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. சனியின் பார்வை 4, 7. 12 ஆகிய மூன்று இடங்களில் பதிகிறது. எனவே தாயின் உடல்நலம் சீராகும். இடம் வாங்குவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கட்டிய வீடு பாதியில் நிற்கின்றதே' என்ற கவலை இனி மாறும் உங்களுக்கோ, உங்கள் உடன்பிறப்புகளுக்கோ வாழ்க்கைத்துணை அமைவதற்கான வழிபிறக்கும். பயணங்கள் அதிகரிக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் மன்ற ஆசை நிறைவேறும் உத்தியோகத்தில் இடமாற்றம் உறுதியாகும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தாமதப்பட்ட பதவி தடையின்றி கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ- மாணவிகளுக்கு கல்வியில் இருந்த குழப்பங்கள் அகலும். பெண்களுக்கு விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. வீட்டில் உள்ளவர்கள் உங்கள் குணம் அறிந்து நடந்துகொள்வர்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜூன்: 18, 19, 22, 23, ஜூலை: 5, 6, 9, 10, 15, 16

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

X

Maalai Malar
www.maalaimalar.com