மகரம்- வார ராசிபலன் 24.5.2026 முதல் 30.5.2026 வரை

சுப விரயங்கள் செய்ய உகந்த காலம்.
மகரம் வார ராசிபலன்
Published on

மகரம்

மன நிறைவும், நிம்மதியும் உண்டாகும் வாரம். சுகஸ்தான அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுகிறார்.தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் விவேகமான சிந்தனை செய்து தொழிலை வளர்ப்பீர்கள். இது பொற்காலம் என்று சொல்லும் வகையில் உபரி வருமானம் உண்டாகும்.

திருமணத்தடை விலகும்

கடன் பிரச்சினைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களால் சந்தோஷம் ஏற்படும். சேமித்த பணத்திற்கு நகையாகவோ, இடமாகவோ வாங்குவீர்கள். புகழ், அந்தஸ்து, கவுரவம் அதிகரிக்கும். பேச்சில் தெளிவு ஏற்படும். திருமணத்தடை விலகும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். சகோதரர்களால் வீண் விரயம் உண்டு. சுப விரயங்கள் செய்ய உகந்த காலம்.

சந்திராஷ்டமம்

அடமானச் சொத்துக்கள் மீண்டு வரும். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கலாம். 25.5.2026 அன்று காலை 9.02 மணி வரை சந்திராஷ்டமம் இருப்ப தால் முன் கோபத்தில் பகைமை உருவாகும். இது வரை நீங்கள் கட்டி காப்பாற்றிய வீரம், விவேகம் மட்டுப்படும். பேசும் வார்த்தையில் கவனமும் நிதானமும் தேவை. வைகாசி விசாகத்தன்று பாலாபிஷேகம் செய்த முருகனை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com