மகரம்- 2026 ஆனி மாத ராசிபலன்

புதிய முயற்சிகளில் வெற்றிகாணப் போகிறீர்கள்.
Magaram
மகரம்- ஆனி மாத ராசிபலன்
Published on

மகரம்

மகர ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் ஈளி சகலய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மாதக் கடைசியில் அவர் வக்ரமும் பெறுகிறார் ஆனால் தற்சமயம் பெயர்ச்சியான் குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப நல்ல சந்தரப்பங்கள் பலவும், இம்மாதம் உங்களைத் தேடி வரப்போகிறது. பகைவர்கள் உங்களை விட்டு விலகுவர். புதிய முயற்சிகளில் வெற்றிகாணப் போகிறீர்கள். தொழில் உத்தியோகம் போன்றவற்றில் நீங்கள் எது நடக்க வேண்டும். என்று சிந்தித்தீர்களோ அது நடைபெறும், பொருளாதார நிலை திருப்தி தரும்.

ரிஷப -செவ்வாய்

ஆனி மாதம் 5-ந் தேதி (19.6.2026) அன்று செவ்வாய் ரிஷப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4. 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செல்வாய். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வரும் பொழுது, நல்ல பலன்கள் இல்லம் தேடி வரும் வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டை பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். அசையாச் சொந்துக்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அவர்களது திருமணம் சம்பந்தமாகவோ, வெளிநாடு சென்று படிப்பது சம்பந்தமாகவோ வேலை கிடைப்பது சம்பந்தமாகவோ செய்யும் முயற்சி பயன்தரும்.

சிம்ம-சுக்ரன்

கடக ராசியில் சஞ்சரிக்கும் சுக்ரன், ஆனி 21-ந் தேதி (5.7.2026) அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 5. 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் அஷ்டமத்திற்கு வருவது அவ்வளவு நல்லதல்ல. பிள்ளைகளாலும், பெற்றோராலும் மனக்கசப்பு தரும் தகவம் வரலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. விரயங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறையும். கூட்டாளிகளின் போக்கை உங்கள் மனநிலை ஏற்றுக்கொள்ளாது. இக்காலத்தில் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

சனி வக்ரம்

ஆனி 31-ந் தேதி (15.7.2026) அன்று மீன ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதனாகவும், தனாதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. அனைத்து செயல்பாடுகளிலும் தட்டுப்பாடுகளும், தடைகளும் வந்து கொண்டேயிருக்கும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். குடும்ப பிரச்சினை கூடும். உங்கள் ராசிக்கு 5, 9, 12 ஆகிய இடங்களில் சளியின் பார்வை பதிகிறது. எனவே பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. நல்ல இடத்தில் வேளை பார்த்து வந்த பிள்ளைகள், அதை விட்டு விலகிக்கொள்ள நேரிடும். பாகப்பிரிவிளை இழுபறி நிலையில் இருக்கும். பகை உணர்வு மிக்கவர்கள் பக்கத்தில் இருப்பர். பயணங்களால் பிரச்சினைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பணி மாற்றம் அல்லது பணி நீக்கம் செய்யப்படும் அளவிற்கு பிரச்சினைகள் வரலாம்.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு முக்கிய நபர்களின் ஆதரவு உண்டு, உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு தன்னிப்போன ஒப்பந்தங்கள் தானாக வந்துசேரும். மாணவ மாணவிகளுக்கு, பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்து சேரும். பொருமா தார நிலை உயரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்?

ஜூன்: 22, 23, 26, 27, ஜூலை: 5, 6, 11, 12,

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்,

X

Maalai Malar
www.maalaimalar.com