

கடக ராசிக்கு 7,8ம் அதிபதியான சனிபகவான் கோட்சாரத்தில் ராசிக்கு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இவர் 27.7.2026 முதல் 10.12.2026 வரையில் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். புதிய முயற்சிகளில் கொடுக்கல், வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும். இடமாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் ஏற்படலாம். தம்பதிகளுக்குள் நிவவிய பனிப்போர் விலகும். மறு விவாக முயற்சியில் நேரமும், காலமும் விரயமாகும். சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்ட பணம் பொருள் நகை உயில் சொத்து காப்பீட்டு பணம் போன்றவைகள் கிடைக்கலாம். உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும். வேலை இல்லாதவர்களின் திறமைக்கும் தகுதிக்கும் தகுந்த வேலை கிடைக்கும்.
பிறவிக் கடன் மற்றும் பொருள் கடனால் மன உளைச்சல் அதிகமாகும்.நோய்க்கு உரிய வைத்தியம் கிடைக்கும். குடும்பப் பெரியவர்களை, இறந்தவர்களை நிந்தித்து பேசக்கூடாது. தீர்த்த யாத்திரை, ஆன்மீக யாத்திரை, முன்னோர்கள் வழிபாட்டின் மூலம் இன்னல்களில் இருந்து விடுபட முடியும். ராசியில் உள்ள குருபகவான் உண்ண உறங்க நேரமில்லாமல் உழைக்கச் செய்வார். கண் நோய்க்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய நேரும் அல்லது கண்ணடி அணிய நேரலாம். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வாக்கினால் தொழில் புரியும் வழக்கறிஞர்கள், புரோக்கர்கள் ஏற்றம் மிகுதியாக இருக்கும். அன்றாடம் அழியும் பொருட்களான காய்கறிகள், பழங்கள், திரவ பொருட்களான பால், தயிர், ஜூஸ் விற்பனையாளர்கள்,ஓரிடத்தல் நிற்காமல் அலைந்து திரிந்து தொழில் செய்பவர்களின் லாபம் பெருகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு ஆண் வாரிசு கிட்டும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ ஆரம்பிப்பார்கள்.
கடக ராசிக்கு 3,12ம் அதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலம் இடப்பெயர்ச்சி செய்ய நேரும். ஆவணங்கள் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் சீராகும். காணாமல் போன அல்லது கை மறதியாக வைத்த ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு , பாஸ்போட், கல்விச் சான்றிதழ்கள் கிடைக்கும். உயில் எழுதலாம். உயில்களில் திருத்தம் செய்யலாம்.சொத்துக்கள் தொடர்பான பத்திரங்களில் திருத்தம் செய்யலாம்.புதிய பாஸ்போர்ட்க்கு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு விண்ணப்பிக்கலாம். ஏற்றம் மிகுதியாக இருக்கும், கடக ராசியை சேர்ந்த நகைச்சுவை கலைஞர்கள் பிரபலமடைவார்கள்.குழந்தைகளின் ஆயுள் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனதை மகிழ்விக்கும் சுப நிகழ்வுகள் அனைத்தும் நடக்கும்.நீண்ட காலமாக காணமல் போன பொருட்கள் எல்லாம் கிடைத்துவிடும்.செவித்திறன் குறைவிற்கான வைத்தியம் பலன் தரும். இளைய சகோதரத்திற்கு அரசு உத்தியோகம் அல்லது அரசின் உதவிகள் கிடைக்கும்.தகவல் தொடர்பு துறை மற்றும் ஊடகங்களில் பணிபுரிவரின் தனித்திறமைகள் பாராட்டப்படும்.ஒரு சிலருக்கு விபரீத ராஜயோக அடிப்படையில் கைவிட்டுப் போன சொத்து அல்லது வேலை கிடைக்கும்.வெளிநாட்டில் வாழ்பவர்களின் பூர்வீகத்திற்கு வந்து போகும் ஆசையா நிறைவேறும்.
கடக ராசிக்கு 7, 8ம் அதிபதியான சனி பகவான் வக்ரகதியில் தனது சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது ராசியில் நிற்கும் உச்ச குருபகவான் எந்த விதத்திலும் உங்களை கைவிட மாட்டார் என்பதால் எந்த பயமும் தேவையில்லை.தன் பார்வை பலத்தால் பார்க்கும் இடத்தை செழிப்படைய செய்வார். ராசி பலம் பெறுவதால் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் மற்றும் தைரியம் உண்டாகும். கடக ராசியினரின் தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் நல்ல மாற்றம் ஏற்படும். மந்தமாக இருந்தவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு காரியம் சாதிப்பீர்கள்.அலை பாய்ந்த கட்டுக்கடங்காத எண்ணங்கள் கட்டுப்படுத்தப்பட்டு மனதில் அமைதி குடிபுகும். பாதுகாப்பை உணர்வார்கள்.சற்று குழப்பம் ஏற்பட்டாலும் அதற்குரிய தீர்வையும் கண்டுபிடித்து விடுவீர்கள்.
உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும்.விட்டுப் பிரிந்த உறவுகள் எல்லாம் தேடி வரும்.சில உறவினர்களிடம் எதிர்பார்த்த, எதிர்பார்க்காத உதவிகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்காது.பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும். உங்களின் சமூக அந்தஸ்து பல மடங்கு உயரும், ஆரோக்கிய குறைபாடு அகலும். அதிர்ஷ்டக் காற்று கூரையை பிரித்துக் கொண்டு கொட்டப் போகிறது. வெளிநாட்டுப் பணம் சரளமாக புழங்கும். கடக ராசியினரை சிற்றின்பம், பேரின்பம் மாறி, மாறி உற்சாகப்படுத்தும். பல்வேறு வழிகளிலும் செல்வமும் அதிர்ஷ்டமும் உங்களை திணறடிக்கும். எவ்வளவு தாழ்வான நிலையில் இருப்பவரும் மிகக் குறுகிய காலத்தில் லாபக் கடலில் நீந்துவார்கள். பெரும் வாழ்வியல் மாற்றம் நிகழப் போவதில் எந்த சந்தேகமும் இல்லை.அந்நிய மதத்தவர் அல்லது அந்நிய மொழியினரால் ஆதாயம் ஏற்படும். இளைய மனைவியின் பூர்வீகச் சொத்து உங்கள் பெயருக்கு வரும். நோய் தாக்கம் குறையும், கடன் நீங்கும்.எதிரிகள் புறமுதுகு காட்டுவார்கள். புதிய நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள்.
இரண்டில் கேது எட்டில் ராகு இருப்பது கோட்சார ரீதியான சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்தும். எனினும் குரு பலம் சாதகமாக இருப்பதால் திருமணம் முயற்சி சிறு இழுபறிக்குப் பிறகு சாதகமாகும்.ஒரு சிலருக்கு குலப் பாகுபாடில்லாத இரண்டாம் திருமணம் மட்டுமல்ல மூன்றாம் திருமணமும் நடக்கும்.
ராசியில் உச்ச குரு இருப்பதால் புத்துணர்வோடு செயல்படுவீர்கள். பிறந்தவீடு மற்றும் புகுந்த வீட்டின் நல்லாதரவு கிடைக்கும்.ராசிக்கு இரண்டில் எட்டில் கேது இருப்பதால் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும்.
வியாபாரம் சூப்பராக நடைபெறும். நல்ல லாபம் கிடைக்கும். புதியதொழில் கூட்டாளிகளை சேர்க்கவோ பழைய கூட்டாளியை மாற்றவோ கூடாது. 8ல் உள்ள ராகு பேராசையை தூண்டி பெரிய முதலீட்டில் மாட்டிவிடுவார். மிகக் குறுகிய காலத்தில் பெரிய தொகை சம்பாதிக்க ஆசைப்பட்டால் அது விபரீத விளைவை தரும்.அதிக முதலீடு, புதிய தொழில் ஒப்பந்தங்களை தவிர்க்க வேண்டும். அதிக கடன் வாங்கக்கூடாது. நம்பிக்கை இல்லாத புதிய நபர்களிடம் வியாபாரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு விரும்பிய ஊதிய உயர்வுடன் இடம் மாற்றம் கிடைக்கும். ஆனால் உயர் அதிகாரிகளால் நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். வேலைப் பளு மன சஞ்சலத்தை அதிகரிக்கும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களுடன் பிணக்குகள் அதிகரிக்கும். வேறு நல்ல வேலை கிடைக்காதா என்ற ஆதங்கம் மேலோங்கும் . இருக்கும் வேலையை விட்டால் அடுத்த வேலை கிடைப்பது சிரமம். எனவே கிரகங்களின் தாக்கம் குறையும் வரை பொறுமை காக்கவும்.
தொகுதி மக்களுக்கும் உங்களுக்கும் உள்ள நட்பு வலுப்படும்.உங்களைச் சுற்றி எப்பொழுதும் கட்சி நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருப்பார்கள். உங்களின் நண்பர்கள் உங்கள் கருத்தை ஆமோதிப்பார்கள். நிறைய பணம் செலவாகும். கடன் பெற்று செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.திடீர் புகழ் வரும், புகழுக்கு திடீர் பங்கம் வரும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை பிறருக்கு கிடைப்பது,வதந்திகளால் அவமானம் போன்ற மன சஞ்சலம் இருக்கும்.
கடக ராசியினர் தினமும் திருக்கோளாறு பதிகம் படிக்க வேண்டும். மத குருமார்கள், ஆச்சார்யர்கள், பிராமணர்களுக்கு தேவையான உணவு உடை தானம் வழங்க நிம்மதி குடிபுகும். வயது முதிர்ந்தவர்களுக்கு காது கேட்கும் கருவி, கண்ணாடி வாங்கி கொடுப்பதுபோன்ற உதவிகளை செய்ய மனக்குறை நீங்கும்.