

பராபவ வருடம் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் போது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே குரு பகவான் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கும், 9-ம் இடத்திற்கும் அதிபதியானவர் குரு பாக்கியாதிபதி உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் பலவழியிலும் நன்மை ஏற்படும் நினைத்தது நிறைவேறும். நேசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுப செய்தி வந்துசேரும். உறவினர் வழியில் ஏற்பட்ட பிரச்சினை ஒவ்வொன்றாக அகலும் நிலைமை சீராகி நிம்மதி காண்பீர்கள். தொழில் போட்டிகள் அகலும் வர்த்தக கூட்டாளிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறும் டுகள் சமரசமாக முடியும்.
ஆனி மாதம் 5-ந் தேதி (19.6.2026) அன்று ரிஷப ராசிக்கு செய்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் லாப ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். தொழில் ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்திற்கு வருவதால் தொழிலில் முன்னேற்றமும், கூடுதல் லாபமும் கிடைக்கும். வாடகை கட்டிடத்தில் நடத்தும் தொழிலை சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கலையே என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது நல்ல நிறுவனங்களில் இருந்து கூடுதல் சம்பனம் தருவதாக சொல்லி அழைப்புகள் வரலாம் ஜாதகம் பலம் பெற்றவர்கள் அதை ஏற்றுக்கொள்ளலாம். பொது நலத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரத்துவ போகம் உண்டு, என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப்போட்ட இடம். இப்பொழுது அதிக விலைக்கு விற்று அதன் மூலமும் லாபம் கிடைக்கும்.
கடக ராசியில் சஞ்சரிக்கும் சுகரன். ஆனி 21-ந் தேதி (5.7.2006) அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 1, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் குடும்ப ஸ்தானத்திற்கு வரும் பொழுது குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண் பிள்ளைகளின் சுபச் சடங்குகள் நடைபெறும். பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசை பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.
ஆனி 31-ந் தேதி (15.7.2026) அன்று மீள ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7. 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். குருவின் பார்வை சனியின் மீது பதிவதால், இந்த வக்ர காலத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. அதே சமயம் எதிரிகளின் தொல்லை இருக்கத்தான் செய்யும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. பண நெருக்கடி அதிகரிக்கும் சளியின் பார்வை உங்கள் ராசிக்கு 3, 6, 11 ஆகிய இடங்களில் பதிவதால் முன்னேற்றப் பாதையில் இருந்த இடையூறுகள் அகலும் முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப் போடு சில பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். உடன்பிறப்புகளை அனுசரித்துச்செல்வது நல்லது. அவர்களின் இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வெளிநாட்டில் பணிரிவோருக்கு குடியுரிமை கிடைப்பது தாமதமாகும். இளைய சகோதரருடன் உள்ள கருத்துவேறுபாடு நீடிக்கும். இதுபோன்ற தேரங்களில் குலதெய்வம், இஷ்ட தெய்வ பிரார்த்தனைகளை மேற்கொள்வது நல்லது. பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்துசேரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நினைத்தபடியே லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டு. மாணவ மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு சுபச் செய்திகள் வந்தசேரும் தேவைக்கேற்ற வருமா ணம் கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்!-
ஜூன்: 20, 21, 26, 27, ஜூலை: 7, 8, 9, 12, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: வெளிர் நீலம்.