கும்பம்- வார ராசிபலன் 9.8.2026 முதல் 15.8.2026 வரை

திருமண விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது.
Kumbam
Published on: 

கும்பம்

பொருளாதாரத்தில் கவனம் தேவை. ராசி அதிபதி சனி பகவான் வக்ர கதியில் சஞ்சரிக்கிறார். ராசிக்கு ஆறாம் இடத்தில் கடன் நோய் எதிரிகளை சொல்லக்கூடிய ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சூரியன் புதன் குரு ஆகிய மூன்று கிரகங்கள் சேர்க்கை பெற்றுள்ளது. ருண, ரோக சத்ரு ஸ்தானம் வலுப்படுவதால் பொருளாதாரத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும். கடன் பெறுவது கடன் கொடுப்பது ஆகியவற்றில் விழிப்புடன் இருக்க வேண்டும். வக்கீல்கள், சேல்ஸ்மேன்கள், இலக்கிய பேச்சாளர்கள், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள், ஜோதிடர்கள் போன்றவர்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய விளம்பரம், வளர்ச்சி கிடைக்கும். ராசியில் ராகுவும் களத்திர ஸ்தானத்தில் கேதுவும் நிற்பதால் சோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. எனவே திருமண விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு முறையான திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட பலவிதமான இன்னல்களும் அகலும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com