கும்பம்- வார ராசிபலன் 2.8.2026 முதல் 8.8.2026 வரை

ஆரோக்கிய குறைபாட்டிற்கு மாற்றுமுறை வைத்தியத்தை நாடுவீர்கள்.
Kumbam
Published on

கும்பம்

சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சனிபகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். ஆன்மீக பயணங்கள் அதிகமாக மேற்கொள்வீர்கள். வேலையில் பணி நிரந்தரமாகும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும். பூர்வீகம் குலதெய்வம் குழந்தை அதிர்ஷ்டம் காதல் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். மனைவி அல்லது உறவினரின் உயில் சொத்து, பங்குச்சந்தை, லாட்டரி, இன்சூரன்ஸ் ஆகிய வற்றின் மூலம் எதிர்பாராத திடீர் தன வரவு ஏற்பட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பீர்கள். ஆரோக்கிய குறைபாட்டிற்கு மாற்றுமுறை வைத்தியத்தை நாடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை மாறுவதை தவிர்த்தல் நலம். செல்வாக்கை பயன்படுத்தி குறுக்கு வழியில் உங்களை எண்ணங்களை, லட்சியங்களை அடையக்கூடாது. ஆடி வெள்ளிக்கிழமை சாதுக்கள் மற்றும் உடல் ஊனமுள்ளவர்களுக்கு அன்னதானம் செய்தல் நலம்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com