

புண்ணிய பலன்கள் மிகுதியாகும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் புதன் சேர்க்கை உள்ளது. இது புத ஆதித்ய யோகமாகும். கற்ற கல்வியால் வெற்றி புகழ் மதிப்பு, மரியாதை கிடைக்கும். தாய், தந்தையின் அன்பும், ஆதரவும் பெருகும். பிரிந்து சென்ற பிள்ளைகள் மீண்டும் வந்து இணைவார்கள். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி பதவி கிடைக்கும். அரசாங்க காரியங்களில் இலாபமும் அனுகூலமும் ஏற்படும். கூலித் தொழிலாளிகளின் நிலமை சீராகும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும்.
உயர்ந்த ரக வாகன வசதி அமையும். பெண்கள் பிறந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள். சிலர் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில், அதிக கடன் வாங்கி சமயத்தில் சிரமப்படுவார்கள். எதிரிகள் தொல்லை குறையும். சிலருக்கு தேவையற்ற பயணங்கள் வம்பு வழக்குகளை தவிர்க்கவும். எல்லோரையும் அனுசரித்து செல்ல வேண்டும்.மாணவர்களுக்கு இரவும் பகலும் படித்த படிப்பு கை கொடுக்கும். உடல் அசதி,சளி இருமல் போன்ற சிறுசிறு அசவுகரியம் இருக்கும். சனிக்கிழமை எள் சாதம் வழங்கவும்.