கும்பம்- 2026 ஆனி மாத ராசிபலன்

நம்பிக்கைகள் நடைபெறும் நேரம் இது.
kumbam
கும்பம் ஆனி மாத ராசிபலன்
Published on

கும்பம்

கும்ப ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது. மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உச்சம் பெற்ற குருவின் பார்வை சனி மீது பதிவதால் இரண்டாமிடம் புனிதமடைகின்றது. ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. எனவே குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்பொழுது நரிதமாக நடைபெறும். இடமாற்றம், வீடு மாற்றம் வருவதற்கான வாய்ப்பு உண்டு, பொருளாதார நிலை திருப்தி தரும். இருப்பினும் ஆறில் குரு இருந்தால் ஊரில் பகை' என்பார்கள். எனவே நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

ரிஷப -செவ்வாய்

ஆனி மாதம் 5-ந் தேதி (19.5.2020) அன்று செவ்வாய் ரிஷப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டு. தொழில் வளர்ச்சியும், மதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு. எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். கடன்கள் வசூலாகி கவலையைப் போக்கும். பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பர். நம்பிக்கைகள் நடைபெறும் நேரம் இது.

சிம்ம சுக்ரன்

கடக ராசியில் சஞ்சரிக்கும் சுக்ரன், ஆனி 21-ந் தேதி (5.7.2026) அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 4. ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும் பொழுது திருமணம் போன்ற சுயகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும், தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு, வெளிநாட்டில் இருந்து அனுகூலமான தகவல் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.

சனி வக்ரம்

ஆனி 31-த் தேதி (15,7.2006) அன்று மீன ராசியில் சளி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 12-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான் உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெறு வது அவ்வளவு நல்லதல்ல மனப்பயம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலலது. திடீர் விரயங்கள் வந்துசேரும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடும். சனிஸ்வரர் வழிபாடும் இக்காலத்தில் உங்களுக்குத் தேவை.

உங்கள் ராசிக்கு 1. 5. 11 ஆகிய இடங்களில் சனியின் பார்வை பதிகிறது. எனவே இக்காலத்தில் தாயின் உடல்நலம் சீராகும். தனவரவிற்கு பஞ்சமில்லை என்றாலும், விரயங்கள் மிக அதிகமாக இருக்கும் வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்படும். இளைய சகோதரத்தோடு இருந்த தெருக்கம் குறையும். உடன்பிறப்புகளால் ஒருசில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். கொடுத்த வாக்கைக்காப்பாற்ற இயலாது. பிறரை நம்பி ஏமாறும் வாய்ப்பு உண்டு.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பாதை புலப்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு கவுரவம் கிடைக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் நாட்டம் செல்லும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்.-

ஜூன்: 25, 26, 29, 30, ஜூலை 7, 8, 12, 18.

மகிழ்ச்சி தரும் வண்ணம் கிரே.

X

Maalai Malar
www.maalaimalar.com