செய்திகள்

எரித்திரியா நாட்டில் 2 திருமணம் செய்யாவிட்டால் சிறை - அமலுக்கு வந்தது புதிய சட்டம்

Published On 2018-01-31 15:30 GMT   |   Update On 2018-01-31 15:30 GMT
வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. #TwoWivesMandatory #Eritrea

அஸ்மாரா:

இந்தியா உள்பட பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலையில் எரித்ரியா என்ற நாட்டில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

எரித்திரியா ஒரு வடகிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இது செங்கடலை ஒட்டி அமைந்துள்ளது. அந்நாட்டில் அடிக்கடி போர் நடந்து வருகிறது. இப்போர்களில் ஆண்கள் பலர் மடிந்து வருகின்றனர். எனவே அந்நாட்டில் ஆண்களின் சதவிகிதத்தை விட பெண்களின் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகின்றது

இதனை சரிக்கட்ட அந்நாட்டில் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது, அதன்படி அந்நாட்டை சேர்ந்த ஆண்கள் இரண்டாவது கண்டுப்பாக இரண்டு திருமணம் செய்ய வேண்டும். இரண்டு திருமணம் செய்ய ஆண்கள் மறுத்தாலோ, கணவர் இரண்டாவது திருமணம் செய்ய முதல் மனைவி மறுத்தாலோ அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் ஒரு ஆண் இரண்டு திருமணங்களுக்கு மேல் திருமணம் செய்தாலும் அந்நாட்டில் குற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #TwoWivesMandatory #Eritrea #tamilnews
Tags:    

Similar News