search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாளம்: மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு  - 60 லட்சம் மக்கள் அவதி
    X

    நேபாளம்: மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு - 60 லட்சம் மக்கள் அவதி

    நேபாள நாட்டில் தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ள நிலையில் காணாமல் போன சிலரை தேடும் பண்கள் நடைபெற்று வருகிறது.
    காத்மாண்டு:

    நேபாள நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது, மழையினால் 27 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காணப்படுகின்றன.

    ரப்தி மற்றும் புதிரப்தி ஆறுகளில் வெள்ளநீர் கரை புரண்டு ஓடுகிறது. கரை கடந்து வெளியேறிய வெள்ளநீர் அரித்துச் சென்றதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இங்குள்ள ஜாப்பா, மோராங், சன்சாரி, சப்ட்டாரி, சிராஹா, ரவுட்டாஹட், பன்க்கே, பர்டியா, டாங் ஆகிய மாவட்டங்கள் வெள்ளநீர் அதிகமாக சூழ்ந்துள்ளது. இங்கு பல லட்சம் ஏக்கர்களில் விளைவிக்கப்பட்ட பயிர்கள் நாசமடைந்துள்ளன.

    நாட்டின் பல பகுதிகள் சுமார் மூன்றாயிரம் வீடுகள் வெள்ளநீரில் மூழ்கி முற்றிலுமாக அழிந்தன. சுமார் 35 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

    இன்று பிற்பகல் நிலவரப்படி மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் சார்ந்த விபத்துகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 60 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு உள்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    Next Story
    ×