search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்த் -கமல்ஹாசன் அ.தி.மு.க.வில் இணையலாம்: அமைச்சர் செல்லூர் ராஜூ
    X

    ரஜினிகாந்த் -கமல்ஹாசன் அ.தி.மு.க.வில் இணையலாம்: அமைச்சர் செல்லூர் ராஜூ

    ரஜினிகாந்த் - கமல்ஹாசன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இணைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
    மதுரை:

    மதுரையில் நேற்று நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம்களை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டு கட்சி நிர்வாகிகளிடம் புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் திருத்தம் தொடர்பான பணிகளில் பொது மக்களுக்கு உதவிட கேட்டுக் கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. (அம்மா அணி) தயாராக உள்ளது. உள்ளாட்சி தேர்தல் பணிகளையும் நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடங்கி விட்டோம். வார்டுகளில் மக்களை சந்தித்து வருகிறோம். பொது மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. விலகி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அங்குள்ள அனைவரும் எங்கள் பக்கம் விரைவில் வருவார்கள்.

    மனவருத்தங்களை மறந்து மக்கள் நலன் கருதி அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒரே அணியில் இணைந்து செயல்பட வேண்டும்.

    தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் இருந்தாலும் மக்கள் நலப்பணிகளை செய்வதிலும், மக்களுக்காக நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும் அ.தி.மு.க. முன்னணியில் உள்ளது.

    திரைப்பட நடிகர்கள் அரசியலில் ஈடுபடலாம். ஆனால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தவிர வேறு யாரையும் மக்கள் அரசியலில் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுதான் வரலாறு. அது தான் ரஜினிக்கும், கமலுக்கும் பொருந்தும்.

    அவர்கள் தனிக்கட்சி தொடங்கினால் மக்கள் ஏற்கமாட்டார்கள். அதற்குரிய சூழ்நிலையும் தற்போது இல்லை. எனவே பெரிய கட்சியில் சேர்ந்து ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் மக்கள் பணி செய்யலாம். அ.தி.மு.க.வில் கூட அவர்கள் இணைந்து மக்கள் பணியாற்றலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×