search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஷஸ் தொடருக்கான மெல்போர்ன் பிட்ச் மோசம்: ஐசிசி மதிப்பீடு
    X

    ஆஷஸ் தொடருக்கான மெல்போர்ன் பிட்ச் மோசம்: ஐசிசி மதிப்பீடு

    ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நடைபெற்ற மெல்போர்ன் மைதானத்தின் ஆடுகளம் ‘மோசம்’ என சர்வதேச கிரிக்கெட் வாரியம் மதிப்பிட்டுள்ளது. #Ashes #AUSvENG
    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 4-வது டெஸ்ட் பாரம்பரியமான மெல்போர்ன் மைதானத்தில் பாக்சிங் டே டெஸ்டாக நடைபெற்றது.

    90 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் தொடங்கிய இந்த ஆட்டம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஆடுகளம் வழக்கத்திற்கு மாறாக முற்றிலும் மாற்றமாக இருந்தது. ஆடுகளம் மிகவும் ஸ்லோவாக இருந்ததால் வேகப்பந்து வீச்சாளர்கள் திணறினார்கள். கடைசி நாள் வரை சுழற்பந்து வீச்சுக்கும் சாதகமாக இல்லை.



    இதனால் ஐந்து நாட்கள் முழுவதும் விளையாடிய போதிலும் 24 விக்கெட்டுக்கள் மட்டுமே இரு அணி பந்து வீச்சாளர்களால் வீழ்த்த முடிந்தது. முதல் இன்னிங்சில் வார்னர் சதம் அடித்தார். இங்கிலாந்து வீரர் அலஸ்டைர் குக் இரட்டை சதம் குவித்தார். 2-வது இன்னிங்சில் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்தார்.

    போட்டி டிராவில் முடிந்தவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் ஆடுகளம் குறித்து விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் மெல்போர்ன் ஆடுகளம் மோசம் என ஐசிசி மதிப்பிட்டுள்ளது.



    போட்டி நடுவர் ரஞ்சன் மதுகலே கொடுத்த அறிக்கையை ஐசிசி இன்று வெளியிட்டது. அதில் ‘‘ஆடுகளத்தில் பந்து மீடியமான அளவிலேயே பவுன்ஸ் ஆனது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஸ்லோவாக இருந்தது. நாட்கள் செல்ல செல்ல மிகவும் மோசமானது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கும், பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்க வேண்டும். பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவிக்கின்ற வேளையில், பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தும் வகையிலும் வாய்ப்பு அளிக்க வேண்டும்’’ என்றும் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×