search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 மாநில சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி விருந்து
    X

    8 மாநில சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி விருந்து

    பிரதமர் மோடி பா.ஜனதா நிர்வாகிகளுக்கு விருந்து கொடுக்கும் நிகழ்ச்சியில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தல்களில் எப்படி செயல்படுவது என்பது பற்றி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் பா.ஜ.க. தேசிய, மாநில நிர்வாகிகளை அழைத்து, விருந்து கொடுத்து, அவர்களுடன் கலந்துரையாடுவதை பிரதமர் மோடி வழக்கத்தில் வைத்துள்ளார். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரதமர் மோடியின் பா.ஜ.க. நிர்வாகிகளுடனான சந்திப்பு விரைவில் நடைபெற உள்ளது.

    இந்த ஆண்டு (2018) நாடு முழுவதும் 8 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சில மாநிலங்கள் பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்களாகும். எனவே இதில் வெற்றி பெறுவதை பா.ஜ.க. மிக முக்கியமாக கருதுகிறது.

    இந்த தேர்தல்கள் 2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.க.வை தயார் படுத்த வேண்டியதுள்ளது. எனவே இந்த ஆண்டு நடக்க உள்ள 8 மாநில தேர்தல்களை ஒரு முன்னோட்டமாக பா.ஜ.க.வினர் கருதுகிறார்கள்.



    பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து பேசி, விருந்து கொடுக்க உள்ள பிரதமர் மோடி இந்த 8 மாநில சட்டசபை தேர்தல்கள் பற்றி தான் அதிகம் பேச திட்டமிட்டுள்ளார். எனவே தேர்தல் தொடர்பான அனைத்து விபரங்கள், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், பிரச்சினைகள் மற்றும் வெற்றி - தோல்வி வாய்ப்பு பற்றிய எல்லா குறிப்புகளையும் தயார் செய்து கொண்டு வருமாறு 8 மாநில பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி விருந்து முடிந்ததும் அந்த 8 மாநில நிர்வாகிகளிடம் இதுபற்றி பேசுவார். தேர்தலில் பா.ஜ.க. நிர்வாகிகள் எப்படி பணியாற்ற வேண்டும் என்ற டிப்ஸ்களை வழங்கவும் பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

    குஜராத் தேர்தல் முடிவை போன்று நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மோடியும், அமித்ஷாவும் இப்போதே 8 மாநில தேர்தல் களத்தில் குதித்து விட்டதாக கூறப்படுகிறது. #tamilnews
    Next Story
    ×