search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல்: 59 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
    X

    இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல்: 59 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

    இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 59 வேட்பாளர்களின் பெயர்கள் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் தலைமை இன்று வெளியிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 59 வேட்பாளர்களின் பெயர்கள் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் தலைமை இன்று வெளியிட்டுள்ளது.

    68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் 9-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அங்கு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

    இதற்கிடையே, பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் 68 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று டெல்லியில் வெளியிட்டுள்ளது. முன்னாள் முதல் மந்திரி பிரேம் குமார் துமால் இந்த முறை சுஜன்புர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், இமாசலப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய முதல் மந்திரி வீரபத்ர சிங் சோலன் மாவட்டத்தில் உள்ள அர்கி தொகுதியிலும், ரஜிந்தர் ரானா சுஜான்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மேலும் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×